கோ 2 திரை விமர்சனம்

நடிகர்கள் : பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி, பிரகாஷ்ராஜ், பால சரவணன், இளவரசு, ஜான்விஜய், கருணாகரன், மயில்சாமி, நாசர் மற்றும் பலர்.
இசை : லியோன் ஜேம்ஸ்
ஒளிப்பதிவு : பிலிம் ஆர் சுந்தர் வெங்கட்
படத்தொகுப்பு : கெவின்
இயக்கம் : சரத்
பிஆர்ஓ : சுரேஷ் சந்திரா
தயாரிப்பாளர் : எல்ரெட் குமார்

கதைக்களம்…

தமிழகத்தின் முதல்வர் பிரகாஷ்ராஜ், ஒரு பத்திரிகையாளர் பாபி சிம்ஹாவால் கடத்தப்படுகிறார். பொதுவாக தீவிரவாதிகளை விடுவிக்கும் கோரிக்கைகளை வைக்காமல், அவரது ஆட்சியில் உள்ள குற்றவாளியை சுட்டிக் காட்ட செய்கிறார்.

கதாபாத்திரங்கள்…

ஒரு பத்திரிகையாளனாக பாபி சிம்ஹா பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார். அவர் வில்லனாக பட படங்களில் மிரட்டினாலும் இதில் நாயகன் வேடம் அவருக்கு அவ்வளவாக பொருந்தவில்லை. அதிலும் காதல் ரொமான்ஸ் டான்ஸ் சுத்தமாக பொருந்தவில்லை.

பாலசரவணன் வழக்கம்போல் கொஞ்சம் சிரிக்க வைக்க முயல்கிறார்.

நிக்கி கல்ராணி அழகான தரிசனத்துடன் கொஞ்சம் நடித்தும் இருக்கிறார்.

இளவரசு இதில் கொஞ்சம் அதிகமாகவே ஸ்கோர் செய்திருக்கிறார். விசுவாச அமைச்சர் இருந்து இவர் செய்யும் தில்லு முல்லு ரசிக்கும் ரகம்.

ஜான்விஜய் கொஞ்சம் மிரட்டியும் சிரிக்கவும் வைக்கிறார்.

 

KO2-Movie

 

ஆனால் நாம் பெரிதும் எதிர்பார்த்த பிரகாஷ்ராஜ் உட்கார்ந்த இடத்திலே இருந்து பேசியிருக்கிறார். உடல் மொழியில்லாமல் முக பாவனைகளால் கவர்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஒருசில பாடல்கள் கேட்கும் ரகம். ஆக்ஷன் காட்சியில் பின்னணி இசை வித்தியாசமாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.

படத்தின் ப்ளஸ்….

  • நல்ல தலைமை வேண்டும் + லாபம் கொடுக்கும் டாஸ்மாக்கை மட்டும் அரசு வைத்துக்கொண்டு, கல்வி மற்றும் மருத்துவ துறைகளை தனியாருக்கு விற்பது உள்ளிட்ட வசனங்கள்.
  • டைட்டில் சாங், + பின்னணி இசை
  • அமைச்சர் பிரச்சினையுடன் பொது நல கருத்துக்களையும் சொல்லியிருக்கலாம்

படத்தின் மைனஸ்…

  • கோகிலா பாடல்… ஆல்ரெடி கேட்ட போல இருக்கே ப்ரோ
  • பாலசரவணின் தேவையில்லாத கற்பனை காட்சிகள்.

 

Bobby-Simha-KO2-Movie-Stills

 

சொல்லவேண்டிய விஷயத்தை எளிதாக சொல்லாமல் தேவையில்லாத காரணங்களை பாபி சிம்ஹா இரண்டு முறை கூறும்போது சலிப்புதான் ஏற்படுகிறது.

முதல் பாதியில் வேகம் கூட்டாமல் இரண்டாம் பாதியில் மட்டும் கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர். சொன்ன கருத்துக்காக சபாஷ் போடலாம்.

மொத்தத்தில் கோ 2… அரசாங்கத்திற்கு பாடம் சொல்லும் படம்..!

 

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்