மாரி பாடல் விமர்சனம்

‘3’, ‘வேலையில்லா பட்டதாரி’ படங்களை தொடர்ந்து தனுஷ்-அனிருத் இணைந்துள்ளதால் மாரி படத்தின் இசைக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவர்களின் கூட்டணி ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளதா என்பதை பார்ப்போம். இப்படத்தில் 3 பாடல்களை தனுஷ் எழுதி பாடியுள்ளார். இதில் இரண்டு பாடல்களில் அனிருத்துடன் இணைந்து பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1) மாரி தர லோக்கல்…
பாடலாசிரியர் : தனுஷ்
பாடியவர் : தனுஷ்

தனுஷின் குரலில் அடுத்த ஒரு ஹிட்டு. மாரியின் குணாதிசயங்களை சொல்வதாக அமைந்துள்ளது பாடல். மாரி கொஞ்சல் நல்ல மாரி. ரொம்ப வேற மாரி… உரசினா தங்க மாரி இருப்பான்.. ஆனா முறைச்சா சிங்கமாரி மாறிடுவான் என்று வரிகள் அமைந்துள்ளது. பாடல் நிச்சயம் ரசிகர்களை குத்தாட்டம் போட வைக்கும். தனுஷ் ரசிகர்களுக்கு மாரியின் விருந்து.

2) ஒரு வித ஆசை…
பாடலாசிரியர் :  தனுஷ்
பாடியவர்கள்   :  அனிருத், வினீத் சீனிவாசன்

1980ஆம் ஆண்டுகளில் வந்த பாடல்களை இந்த இசை நிச்சயம் நினைவிற்கு கொண்டு வரும். அழகு பெண்களை பார்த்து இடிக்க தோன்றுகிறதா? குத்துபாட்டு கேட்கும் இளைஞர்களுக்கு மெலோடி கேட்க ஆசை வருகிறதா என்று ஒவ்வொரு விதமான ஆசையும் சொல்கிறது. வித்தியாசமான இப்பாடல் நிச்சயம் இன்றைய இளைஞர்களுக்கு பிடிக்கும்.

3) டோனு… டோனு…
பாடலாசிரியர் : தனுஷ்
பாடியவர்கள்   : அனிருத், அலிசா தாமஸ்

இந்தப்பாடல் மட்டும்தான் நாயகியுடன் பாடுவதாக தோன்றுகிறது. காதலி மீதுதான் கொண்ட காதலை மென்மையாக சொல்லாமல் தகராறு செய்து சொல்வது போல் தோன்றுகிறது. இப்பாடல் எல்லோருக்கும் பிடிக்குமா என்பது சந்தேகமே. தனுஷ் அனிருத் கூட்டணியில் இதற்கு முன்பு வந்த வரிகளே இதிலும் திரும்ப திரும்ப ஒலிக்கிறது. ஆனால் அலிசா குரலில் ஒலிக்கும்போது கேட்கத் தோன்றும்.

4) பகுலு உடையும் டகுலு மாரி…
பாடலாசிரியர் : ‘டங்கா மாரி’ புகழ் ரோகேஷ்
பாடியவர்கள்   : தனுஷ், அனிருத்

ஒரு நிமிட 15 நொடிகள் மட்டுமே இப்பாடல் ஒலிக்கிறது. ஆனால் இப்பாடல் மிக இறைச்சலாக உள்ளது. எனவே முழுமையாக கேட்க முடியவில்லை. அவர்களாலே பாட முடியாத படி கஷ்டப்பட்டு பாடுவதாக தெரிகிறது.

5) தப்பாதான் தெரியும்…
பாடலாசிரியர் : ‘நானும் ரவுடிதான்’ புகழ் விக்னேஷ் சிவன்
பாடியவர்கள்   : தனுஷ், சின்ன பொண்ணு, மகிழினி

தப்பாதான் தெரியும் என் ரூட்டு. நியாயமான பசங்க எல்லாம் வெளியாக வேண்டும். ஆனா நாங்க செய்றது எல்லாம் நல்லதுதான்.. அது புரிஞ்சாதான் தெரியும் என்ற இந்த வரிகள்.. மாரியின் கொள்கை பாடலாக தோன்றுகிறது. இதில் கேட்கத் தூண்டும் வகையில் பாடல் வரிகள் அமைந்துள்ளதால் பாடலை ரசிக்க முடிகிறது. கூடவே நடனமாடவும் தோன்றுவது நிஜம்.

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்