மனிதன் விமர்சனம்

நடிகர்கள் : உதயநிதி, ஹன்சிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், சதீஷ், விவேக், பிரகாஷ்ராஜ், ராதாரவி, பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் பலர்.
இசை : சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு : ஆர். மதி
படத்தொகுப்பு : ஜே வி மணிகண்ட பாலாஜி
கதை : சுபாஷ் கபூர்
இயக்கம் : ஐ. அஹ்மத்
பிஆர்ஓ : நிகில் முருகன்
தயாரிப்பாளர் : உதயநிதி ஸ்டாலின்

கதைக்களம்…

படத்தின் ஆரம்ப காட்சியிலே ப்ளாட் பாரத்தில் உறங்கும் 6 பேரை ஒரு கார் ஏற்றிக் கொள்கிறது. இந்த விபத்து பெரிய வழக்காகி நீதிமன்றம் செல்ல, அதை கோடீஸ்வரனை காப்பாற்றுகிறார் பிரபல வக்கீல் பிரகாஷ் ராஜ்.

இவரை எதிர்த்து, பொது நல வழக்கை தாக்கல் செய்கிறார் உதயநிதி. ஆனால் சட்டத்தை உடைத்து பொய் சாட்சிகளை உருவாக்கி சவால் விடுகிறார் பிரகாஷ்ராஜ்.

அதன்பின்னர் உதயநிதி என்ன செய்தார்? இந்த வழக்கால் பொது மக்களுக்கு நீதி கிடைத்ததா? உள்ளிட்ட பல கேள்விகளுக்கான விடைதான் இந்த மனிதன்.

manithan udayanidhi

கதாபாத்திரங்கள்…

உதயநிதி… இதுநாள் வரை வேலை வெட்டியில்லாமல், நண்பர் சந்தானத்துடன் சுற்றி திரிவார். கெத்து காட்ட முயற்சித்தும் சில நேரம் தவறவிடுவார்.

ஆனால் இதில் தன்னாலும் நடித்து நிரூபிக்க முடியும் என சாதித்து இருக்கிறார். ஒரு யதார்த்த வக்கீல், குடும்ப பிரச்சினை, சென்னை வாழ்க்கை, பணம் பெற்றுக் கொண்டு கேஸை மாற்றுவது, அடியாளிடம் அடி வாங்குவது என மனிதன் படு யதார்த்தம்.

ஆனால் பிரகாஷ்ராஜ், ராதாரவி ஆகியோருடன் நடிப்பில் போட்டி போடாமல் முடியாமல் தவிப்பதால் கொஞ்சம் மெனக்கெட வேண்டிய சூழ்நிலை.

படம் முழுவதும் கோர்ட் கேஸ் என்பதால் நாயகிகளுக்கு பெரிய வேலையில்லை. ஆனாலும் ஹன்சிகா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் கேரக்டர்கள் தேவையான இடத்தில் பொருத்தம்.

ஒருவர் காதலி, மற்றொருவர் ரிப்போர்ட்டர் என கச்சிதம்.

manithan udayanidhi and hanshika

படத்தின் மிகப்பெரிய பலம் பிரகாஷ்ராஜ் மற்றும் ராதாரவியின் யதார்த்தம் கலந்த அனுபவமிக்க நடிப்பு.

ஒரு பெரிய வக்கீலுக்கு உரிய அனைத்தையும் அல்வா சாப்பிடுவது போல் செய்திருக்கிறார். வக்கீல் ஆதிசேஷனாக அசத்தியிருக்கிறார்.

நீதிபதி பாத்திரத்தில் பளிச்சிடுகிறார் ராதாரவி. யதார்த்தமாக பேசுவது, கேஸை ஒத்திவைப்பது என இவரும் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார்.

இவர்களுடன் விவேக்…. வெறும் காமெடி என்றில்லாமல், குணச்சித்திர கேரக்டராக படம் முழுவதும் சப்போர்ட்டாக வருகிறார். கௌரவ தோற்றத்தில் பவர் ஸ்டார் சீனி.

udayanidhi and vivek

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஆர். மதியின் ஒளிப்பதிவில் கோர்ட் காட்சிகள் அருமை. சினிமா கோர்ட் போல் அல்லாமல் படு யதார்த்தமாக காட்சியமைத்த கலை இயக்குனரும் கச்சிதம்.

சந்தோஷ் நாராயணனின் பாடல்கள் படத்திற்கே தேவையில்லை. பொதுவாக உதயநிதியின் படங்களில் பாடல்களும் கைகொடுக்கும். இதில் கொஞ்சமும் தேறவில்லை.

படத்தின் ப்ளஸ்….

  • பணக்காரர்களுக்கான சட்டம் ஏழைகளுக்காக வளைவதில்லை.
  • ஜோடிக்காத யதார்த்த கோர்ட் காட்சிகள், சென்னை நகர வாசிகள்.
  • கோர்ட் காட்சிகள் மற்றும் அஜயன் பாலாவின் சிந்திக்க வைக்கும் வசனங்கள்.

உதாரணமாக…

  • காக்கி சட்டை போட்டவங்களே கை நீட்டும்போது, நாம என்ன பண்ணமுடியும்?
  • உங்ககிட்ட கேசில தோத்ததுக்கே நான் லைப்பை செட்டில் ஆயிட்டேனா, உங்களா ஜெயிச்சிட்டா…
  • ப்ளாட்பாரம் படுப்பதற்கான இடம் இல்லைதான். ஆனா அதுல கார் ஓட்டலாமா?

உள்ளிட்ட பல வசனங்கள் படத்தை தாங்கி நிற்கின்றன.

manithan team

படத்தின் மைனஸ்…

  • சந்தோஷ் நாராயணின் பாடல்கள். ,இறுதிச்சுற்று, ஜிகர்தண்டா, மெட்ராஸ் படப்பாடல்களை போன்றே திரும்ப திரும்ப கேட்க வைக்கிறார். மாற்றிக் கொள்வாரா?
  • படத்தின் இடைவேளை வரையுள்ள காட்சிகள்
  • பிரகாஷ்ராஜ் பாயிண்ட் பை பாயிண்டாக பேசும்போது, உதயநிதிக்கும் அதுபோல தொடர்ச்சி வசனங்கள் கொடுத்திருக்கலாம்.
  • க்ளைமாக்சில் வழக்கில் திருப்பம் வரும்போது அழுத்தம் போதவில்லை.

hanshika and udhayanidhi

எப்போதும் உள்ள கதையாக இல்லாமல் கொஞ்சம் மாறுபட்டு கொடுத்திருக்கிறார். ஜாலி எல்எல்பி படத்தின் ரீமேக்காக இருந்தாலும் தமிழக ரசிகர்களுக்காக செய்த மாறுதல்களால் படத்தை ரசிக்க முடிகிறது.

மொத்தத்தில் மனிதன்… நீதிக்கு துணைவன்..!

 

 

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்