மாப்ள சிங்கம் விமர்சனம்

மீண்டும் விமல், சூரி, அஞ்சலி கூட்டணியில் வெளிவந்திருக்கிற படம். இந்த மாப்ள சிங்கம் எப்படி கர்ஜித்திருக்கிறார் என்பதை பார்ப்போமா…?

நடிகர்கள் : விமல், அஞ்சலி, சூரி, ராதாரவி, மயில்சாமி, மதுமிலா, மனோ பாலா, காளி வெங்கட், சிங்கமுத்து, ராம்தாஸ் மற்றும் பலர்.
இசையமைப்பாளர் : ரகு நந்தன்
ஒளிப்பதிவு : தருண் பாலாஜி
படத்தொகுப்பு : விவேக் ஹர்ஷன்
இயக்கம் : ராஜசேகர்
தயாரிப்பாளர் : எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன்

கதைக்களம்…

தன் பெரியப்பா ராதாரவியை போல் விமல், சூரி மற்றும் காளி வெங்கட் குழுவினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பெண்கள் படிக்காமல் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பது இவர்கள் எண்ணம்.

ஒரு சூழ்நிலையில் ராதாரவியின் படித்த மகள் மதுமிளா, அஞ்சலியின் அண்ணனை ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொள்கிறார். இதனால் கோபம் கொள்ளும் ராதாரவி மற்றும் விமல் கோஷ்டியினர் என்ன செய்தார்கள் என்பதே படத்தின் கதை.

கதாபாத்திரங்கள்…

ஒயிட் அண்ட் ஒயிட்டில் பளிச்சென்று அறிமுகமாகிறார் விமல். காதலர்களை பிரிப்பதும், அடாவடி செய்வதும் செம ரகளை. ஒரு கட்டத்தில் இவரே அஞ்சலி மீதும் காதல் கொள்வதும் அதன் பின்னர் வரும் காட்சிகளில் இவர் பேசும் வசனங்கள் ரசிக்க வைக்கிறது.

டேய் எனக்கு இதுதான் பிடிக்கும் என்று நான் சொன்னேனா-? என்று கேட்டுவிட்டு ஒவ்வொன்றாய் செய்வது நச். ஆனால் நடிப்பில் ஸ்கோர் செய்ய ஏனோ மறுக்கிறார்.

Maapla Singam Movie Stills

ஹீரோ ஒயிட் ட்ரெஸ் என்றால் அஞ்சலி கலர்புல் தக்காளி. சேலையிலும் படு அமர்க்களம். கலர் கலராய் வந்து ரசிகர்களின் மனங்களுக்கு வண்ணம் பூசுகிறார்.

குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடி நம்மையும் குலுக்கி செல்கிறார். அழகாலும் நடிப்பாலும் படத்திற்கு கைகோர்த்து இருக்கிறார்.

விமலின் தங்கையாக வரும் டிவி நடிகை மதுமிளாவும் நம்மை கவர்கிறார்.

இவர்களுடன் சூரி, காளி வெங்கட், சுவாமிநாதன் என அனைவரும் அதிரி புதிரி காமெடி செய்திருக்கிறார்கள்.

அஞ்சாவது வரைக்கும் படிச்சு இருந்தா, அடுப்படியில விட்டு இருக்கலாம். இப்போ அதிகம் படிச்சிட்டா அதான் அடுப்பை உங்கள் அடியில வச்சிட்டு போய்ட்டா என ராதாரவியை சூரி கலாய்ப்பது அருமை.

முனிஷ்காந்த் சீரியஸ் டயலாக் பேசி வில்லனாக காமெடி செய்திருக்கிறார்.

இவர்களுடன் ராதாரவி, சிங்கமுத்து, பாண்டிராஜ், ஜெயபிரகாஷ், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பல கேரக்டர்களுக்கு பெரிய வாய்ப்பில்லை. ஆனாலும் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.

vimal and anjali in maapla singam

தொழில்நுட்ப கலைஞர்கள்…

தருண் பாலாஜியின் ஒளிப்பதிவில் அஞ்சலி முதல் அனைவரும் பளிச்சென வருகிறார்கள். (மேக்கப்களுக்கே நிறைய செலவு ஆகி இருக்கும் போல)

”பிரச்சினையை பண்றதுக்கே பிள்ளையார் கோயில்ல அர்ச்சனை பண்ணிட்டு வந்துருக்கோம்..” உள்ளிட்ட பல வசனங்கள் டான் அசோக்கின் பெயரைச் சொல்லும்.

விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பை இன்னும் கவனித்திருக்கலாம். நிறைய கேரக்டர்கள் இருப்பதால் எல்லாருக்கும் வாய்ப்பளிக்க நினைத்திருப்பார் போல.

ரகுநந்தனின் இசையில் பாடல்கள் பலம் சேர்த்துள்ளன. வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்…, எதுவுமே தோணலை என்ன ஆச்சு மாப்ள…. என அனைத்தும் ரசிக்க வைக்கின்றன.

edhku machan kaadhal song shoot

சிவகார்த்திகேயன், அனிருத் பாடிய ‘எதுக்கு மச்சான் காதல்…’ என்ற பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கிறது.

படத்தின் ப்ளஸ்…

  • பாடல்களே படத்தின் முக்கிய பலம்
  • கலர்புல்லான காமெடி நாயர்களின் டைமிங் சென்ஸ்

படத்தின் மைனஸ்…

  • போர் அடிக்கும் அட்வைஸ் காட்சிகள்
  • படத்தின் நீளம்
  • பேசிக்கொண்டே இருக்கும் பல கேரக்டர்கள்

படம் முழுவதும் கிராமமே இருந்தாலும், எல்லாரையும் பணக்காரர்களாக காட்டியிருக்கிறார் இயக்குனர் ராஜசேகர். வீட்டையும் கேரக்டர்களை மட்டுமே காட்டியிருக்கிறார்.

விமல் படம் முழுவதும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஆனால் இவருக்கு மிரட்டல் வில்லன் இல்லாமல் போனது ஏமாற்றமே. முதல் காட்சியில் வரும் வித்யூலேகா என்ன ஆனார்..?

மொத்தத்தில் மாப்ள சிங்கம்… காமெடி தங்கம்.

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்