மருது திரை விமர்சனம்

நடிகர்கள் : விஷால், சூரி, ஸ்ரீதிவ்யா, ராதாரவி, குலப்புளி லீலா, ஆர் கே சுரேஷ், நமோ நாராயணா மற்றும் பலர்.
இசை : இமான்
ஒளிப்பதிவு : வேல்ராஜ்
படத்தொகுப்பு : பிரவீன் கே.எல்.
இயக்கம் : முத்தையா
பிஆர்ஓ : ஜான்சன்
தயாரிப்பாளர் : கோபுரம் பிலிம்ஸ்

கதைக்களம்…

பேரன் விஷால்-பாட்டி லீலா ஆகிய இருவருக்கும் உள்ள அன்பான ஆழமான உறவை மனைவி, குடும்பம், போலீஸ் கோர்ட் கேஸ் என அதிரடி கலவையாக தந்திருக்கிறார் இயக்குனர் முத்தையா.

கதாபாத்திரங்கள்…

மூட்டைத் தூக்கும் தொழிலாளி மருது. அசல் தொழிலாளியே தோற்றுவிடுவார் என்பது போன்ற உடல்வாகு. கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.

காதலிக்காகவும் தன் பாட்டிக்காகவும், தன் மாமியாருக்காகவும் என பலருக்காகவும் ஆக்ஷன் அவதாரம் எடுத்து அதில் செம மாஸ் காட்டியிருக்கிறார்.

இவருடன் பட முழுக்க வரும் ஸ்ரீதிவ்யா, பாட்டி, சூரி. இவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.

இவர்களுடன் ராதாரவி, மாரிமுத்து, நமோ நாராயணன் என அனைவரும் அந்த கதாபாத்திரங்களாக வாழ்ந்துள்ளனர்.

Marudhu Movie Still

இதில் அனல் பறக்கும் வில்லன் ரோலக்ஸ் பாண்டியனாக மிரட்டியிருக்கிறார் ஆர் கே சுரேஷ்.

ஒவ்வொரு கொலையாக இவர் செய்வதைப் பார்த்தால், இவர் மீது ரசிகர்களுக்கு நிச்சயம் வெறுப்பேறும். தமிழ் சினிமாவின் அருவெறுப்பான வில்லனாக அவதாரம் எடுத்துள்ளார். சபாஷ் சுரேஷ்.

தொழில்நுட்ப கலைஞர்கள்….

முத்தையாவின் இயக்கத்திற்கும் பக்கபலமாக வேல்ராஜின் ஒளிப்பதிவு மற்றும் பிரவீன் எடிட்டிங். இரண்டும் அசத்தல்.

சூறாவளி பாடலில் தெறிக்க விட்டிருக்கிறார் இமான். பின்னணி இசையிலும் மாஸ்தான்.

Marudhu Movie

வீரசமர் கலையில் கிராமத்து அம்சங்கள் அனைத்தும் அற்புதம். தன்னுடைய சண்டையில் என்றும் அனலுக்கு பஞ்சம் இருக்காது என நிரூபித்துள்ளார் அனல் அரசு.

படத்தின் ப்ளஸ்…

  • விஷால், லீலா, ஆர் கே சுரேஷ், ஸ்ரீதிவ்யா கேரக்டர்கள்.
  • ஒளிப்பதிவு மற்றும் சூரியின் காமெடி
  • அழகான கிராமத்து உறவுகள்

Marudhu Still

படத்திற்கு வசனங்கள் பக்கபலம்.. உதாரணத்திற்கு….

  • நம்மைத் தேடி வந்தா நாம தரமானவன்னு அர்த்தம் வர்லைன்னா? தகுதி இல்லாதவன்னு அர்த்தம்!
  • ‘பொண்ணுங்கள’ கும்பிட்டு தான் பழக்கம் கூப்பிட்டு பழக்கமில்ல!!
  •  சமைக்கிற ஆம்பள பொறுப்பா இருப்பான்….   இப்படி பல வசனங்கள் கைகொடுத்துள்ளது.

marudhu still new

படத்தின் மைனஸ்….

  • கொஞ்சம் நீளமான முதல்பாதி.
  • முத்தையாவின் வழக்கமான பார்முலா.

marudhu move

பாடல்கள் பாட்டி பேரன் உறவு என்றாலும், அதில் மாமியார், காதலி என அனைத்தையும் உள்ளே கொண்டு வந்து ட்விஸ்ட் கொடுத்திருப்பது சிறப்பு.

முத்தையா படம் என்றால் இப்படிதான் என்பது போல ஒரு எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

ஒத்தசட ரோசா பாடல் ஓகேதான் என்றாலும், கொம்பன் படத்தின் கறுப்பு நிறத்தழகி பாடலை நினைவுப்படுத்துகிறது. நடனம் + லொக்கேஷன் கூட அதேதான். என்னாச்சு முத்தையா?

மொத்தத்தில் மருது… ஆக்சன் பிரியர்களை அசத்துவான்.

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்