நட்பதிகாரம்-79 விமர்சனம்

கண்ணெதிரே தோன்றினாள், சந்தித்தவேளை, மஜ்னு, உற்சாகம் உள்ளிட்ட படங்களை இயக்கிய ரவிச்சந்திரனின் அடுத்த படைப்பு இது. கிட்டதட்ட 9 வருட இடைவேளைக்கு பின்னர் இவரது படம் வருகிறது. அதே உற்சாகம் இருக்கிறதா? என்பதை பார்ப்போம்..

நடிகர்கள் : ராஜ் பரத், அம்ஜத்கான், ரேஷ்மி மேனன், தேஜஸ்வி, M.S.பாஸ்கர், பஞ்சு சுப்பு, வினோதினி, கலக்கபோவது யாரு புகழ் விக்னேஷ் கார்த்திக் மற்றும் பலர்.
இசையமைப்பாளர் : தீபக் நிலம்பூர்
ஒளிப்பதிவு : R.B.குருதேவ்
படத்தொகுப்பு : சாபு ஜோசப்
பாடல்கள் : கபிலன், ரவிச்சந்திரன்
நடனம் : ராஜூசுந்தரம், பிருந்தா, விஜி
இயக்கம் : ரவிச்சந்திரன்
தயாரிப்பாளர் : டி ரவிக்குமார்

 

கதைக்களம்…

ராஜ் பரத்-தேஜஸ்வி என ஒரு ஜோடி. அம்ஜத்கான்-ரேஷ்மி மேனன் என மற்றொரு ஜோடி. இவர்கள் நால்வரும் ஒருமுறை சந்திக்க அதன்பின்னர் இவர்களுடனே ஒரு நல்ல நட்பு உருவாகிறது.

ஒரு சூழ்நிலையில் ராஜ்பரத்தின் குடும்பம் தவறுதலாக தங்கள் மகனின் காதலியாக ரேஷ்மியை நினைத்து அவர்களுக்கு தெரியாமலே நிச்சயம் செய்து விடுகின்றனர்.

இதை இதய நோயாளியான தன் அப்பா எம் எஸ் பாஸ்கரிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறார் ரேஷ்மி. ஆனால் இதனை தவறாக புரிந்துக் கொண்ட அம்ஜத் மற்றும் தேஜஸ்வி நண்பர்களை வெறுக்கின்றனர்.

அதன்பின்னர் நிச்சயம் செய்துக் கொண்ட ஜோடி திருமணம் செய்துக் கொண்டார்களா? உடைந்த நட்பு சேர்ந்ததா? மற்ற நண்பர்கள் என்ன ஆனார்கள் என்பதையே இந்த நட்பதிகாரம் சொல்கிறது.

natpathigaaram-79 Still

கதாபாத்திரங்கள்…

ராஜ் பரத்… கூடுதல் கவனம் பெறுகிறார். தன் காதலியும் நண்பனும் தன்னை புரிந்துக் கொள்ளாமல் இருப்பதை நடிப்பில் நன்றாக உணர்த்தியிருக்கிறார். ஆனால் காதல் காட்சிகளில் ரொமான்ஸ்தான் வர மறுக்கிறது. பாடல்காட்சியிலும் வெறுமனே நிற்கிறார்.

இவரின் தோற்றத்திற்கு ஆக்ஷன் அதிகம் கைகொடுக்கும். எனவே அந்த ரூட்டிலும் பயணிக்கலாம்.

அம்ஜத் கான் தன் நடிப்பில் கவர்கிறார். நண்பனை புரிந்துக் கொள்ளுடா என ஆடியன்ஸே இவரை திட்டுவது இவருக்கு கிடைத்த பரிசு.

ரேஷ்மி தன் அழகு மற்றும் நடிப்பால் நம்மை கவர்கிறார். தன் தந்தையிடம் சொல்ல முடியாமல் தவிப்பதும், காதலன் தன்னை ஏமாற்றியதையும் தன் கண்களிலேயே சொல்லிவிடுகிறார்.

Natpathigaram-79 Still

பூஜாவாக வரும் தேஜஸ்வி… தன் தேகத்தாலும் ரசிகர்களையும் கவர்கிறார். கண்களால் காதல் பேசி உதடுகளால் உணர வைக்கிறார். அடிக்கடி அரை டவுசருடன் வந்து ரசிகர்களின் உள்ளங்களை அள்ளிச் செல்கிறார்.

தன் மகளின் ப்ரெண்ட்ஷிப்பை தவறாக உணர்ந்து விட்டோமே என எண்ணி எம் எஸ் பாஸ்கர் பேசும் வசனங்கள் நச். உண்மையான நட்பை தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது என பெற்றோருக்கு எச்சரிக்கை கொடுத்திருக்கிறார்.

இவர்களுடன் விக்னேஷ் கார்த்திக் மற்றும் சுப்பு பஞ்சு ஆகியோர் கவனம் ஈர்க்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்..

தீபக் நீலம்பூர் இசையில் ஓரிரு பாடல்கள் பாஸ் மார்க் பெறுகின்றன. பெண்ணே நீ காதல் வலை, ஷைலா மை ஷைலா பாடல்களில் ஒளிப்பதிவு நிச்சயம் பேசப்படும். தன் கேமரா கண்களில் பாடல்களை அழகாக்கியிருக்கிறார் குருதேவ்.

தேவா பாடியுள்ள சொல்லு சொல்லு செல்லம்மா நம்மை கானா உலகத்திற்கு கொண்டு செல்கிறது.

Natpathigaram_79 Still

படத்தின் ப்ளஸ்…

  • கண்களுக்கு விருந்தான ஒளிப்பதிவு
  • நட்பில் விரிசல் ஏற்பட சொல்லப்பட்ட திரைக்கதை

படத்தின் மைனஸ்…

  • தன் அப்பா அரெஸ்ட் ஆனதை கேட்ட அடுத்த நிமிடமே அம்ஜத் வெளிநாடு போவது
  • பொறுமையை சோதிக்கும் அதிக பாடல்கள்
  • தேவையில்லாத க்ளைமாக்ஸ் ஆக்சிடெண்ட்
  • ரிஜிஸ்டர் ஆபிசுக்கு வந்த தன் காதலி என்ன ஆனார்? என்பதையே நாயகன் கண்டு கொள்ளாதது?

Natpathigaram-79 Cast

நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு அருமையான ஆண்-பெண் நட்பை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ரவிச்சந்திரன்.

இவர் தன் முதல் படமானே கண்ணெதிரே தோன்றினாள் படத்தில் இதையே கொடுத்தவர்தான் என்றாலும், இதில் இரண்டு காதல் ஜோடிகளை சேர்த்து சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார்.

மொத்தத்தில் நட்பதிகாரம் 79… ஆண்-பெண் நட்பின் ஆதாரம்..!

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்