நவரச திலகம் விமர்சனம்

மா கா பா ஆனந்த் தனி நாயகனாக நடித்து வெளிவரும் முதல் படம் இது. இப்படத்தின் தயாரிப்பாளரிடம் முழுக்கதையையும் போனிலே கூறினாராம் இயக்குனர். இவர்களின் நவரச திலகம் எப்படி என்பதை பார்த்து வருவோமா?

நடிகர்கள் : மா.கா.பா.ஆனந்த், ஸ்ருஷ்டி டாங்கே, கருணாகரன், ஜெயபிரகாஷ், இளவரசு, பாவா லட்சுமணன், மீரா கிருஷ்ணன், லஷ்மி, மகாதேவன், சித்தார்த் விபின் மற்றும் பலர்.
இசையமைப்பாளர் : சித்தார்த் விபின்
ஒளிப்பதிவு : ரமேஷ்
படத்தொகுப்பு : அருள் மொழி வர்மன்
இயக்கம் : காம்ரன்
தயாரிப்பாளர் : சுதர்சன வெம்புட்டி

கதைக்களம்…

தன் தந்தை இளவரசுவின் சொத்தை காலி செய்து ஊர் சுற்றுபவர் மா கா பா ஆனந்த். இவரது நண்பர் கருணாகரன். ஒரு முறை ஸ்ருஷ்டியை சந்திக்கும் மா கா பா அவரை காதலிக்கிறார்.

அவர் வீட்டில் பழக்கம் ஏற்படுத்த, ஸ்ருஷ்டியின் அக்காவுக்கு நிச்சயிக்கப் படவிருக்கும் மாப்பிள்ளையான சித்தார்த் விபினுடன் நட்பாக பழகுகிறார். அதன்பின்னர் தான் மாப்பிள்ளை தனக்கு தாய்மாமன் உறவுமுறை என தெரிய வருகிறது.

அவர் அக்காவை திருமணம் செய்தால், ஸ்ருஷ்டிக்கும் தனக்கும் உள்ள உறவுமுறை மாறிவிடும் என்பதால் கலாட்டாக்கள் செய்து திருமணத்தை தடுக்க நினைக்கிறார். இறுதியில் என்ன ஆனது? என்பதை படத்தின் கதை.

கேரக்டர்கள்…

மா கா பாவின் முதல் படத்தை விட இதில் நடனத்தில் கொஞ்சம் முன்னேறியிருக்கிறார். ஸ்ருஷ்டியுடன் காதல், கலாட்டாக்கள் செய்து நிச்சயத்தை நிறுத்த போராடும் காட்சிகள் ஓகே.

இவரின் நண்பராக கருணாகரன். நிறைய காட்சிகளில் பெரிதாக வேலையில்லை. சில காட்சிகளில் கிச்சுகிச்சு மூட்டி விட்டு செல்கிறார். ஆனால் ஒரே முகபாவனை இவருக்கும் ஹீரோவுக்கும். கொஞ்சம் சிரிக்க வைக்க முயற்சித்திருக்கின்றனர்.

இப்படத்தின் இசையமைப்பாளரே இதில் காமெடி, வில்லத்தனம் செய்திருக்கிறார். இவர் வரும் காட்சிகள் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆறுதலை தருகிறது.

navarasa thilagam movie

ஸ்ருஷ்டி டாங்கே… கொஞ்சம் கவர்ச்சி, கொஞ்சம் நடிப்பு என தன் பங்கை செய்திருக்கிறார்.

இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், இளவரசு, நமோ நாராயணன். பாவா லட்சுமணன், மீரா கிருஷ்ணன், லஷ்மி என அனைவரும் தங்கள் பங்குகளை குறை வைக்காமல் நிறைவாக செய்துள்ளனர். மகாதேவனுக்கு மகா வேலை இருக்கும் என எதிர்பார்த்தால் பாவம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சித்தார்த் விபியின் பாடல்கள் ஜஸ்ட் ஓகே. பின்னணி இசைக்கு பெரிதாக வேலையில்லை. ரமேஷின் ஒளிப்பதிவில் நிச்சய ஏற்பாடுகள் காட்சிகள் திருச்சி, வல்லம் காட்சிகளை பார்க்கலாம்.

navarasa thilagam movie poster1

அருண் மொழி வர்மன் நிறைய காட்சிகளை கத்திரி போட்டிருக்கலாம். இளவரசு பார் ஓனர் என்பதால் படத்தில் ஏகப்பட்ட ஒயின் ஷாப் காட்சிகள்.

படத்தின் ப்ளஸ்…

  • காமெடி கலந்த கதையோட்டம்
  • சித்தார்த் விபின் வில்லத்தனம் கலந்த காமெடி

படத்தின் மைனஸ்…

  • படமாக்கப்பட்ட விதம்
  • இழுவையான காட்சிகள்
  • விறுவிறுப்பு இல்லாத திரைக்கதை

காம்ரன் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். ஒரு முழுநீள காமெடிக்கான கதைக்களத்தை இன்னும் ரசிக்கும்படி கொடுத்திருக்கலாம்.

மொத்தத்தில் நவரச திலகம்.. பெயரளவில் மட்டுமே நவரசம்..!

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்