ஓம் சாந்தி ஓம் விமர்சனம்

கடந்த 2012ஆம் தனி நாயகனாக ஸ்ரீகாந்த் நடித்த படம் ‘பாகன்’. அதன்பின்னர் நிறைய படங்களில் கமிட் ஆனாலும் எந்த படமும் வெளியாகவில்லை. எனவே இன்று வெளியாகியிருக்கும் ‘ஓம் சாந்தி ஓம்’ என்ற படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார். அவர் நம்பிக்கை எப்படியுள்ளது என்பதை பார்ப்போம்…

நடிகர்கள் : ஸ்ரீகாந்த், நீலம் உபதயா, பைஜ்ஜு, ஆடுகளம் நரேன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர்.
இசையமைப்பாளர் : விஜய் எபினேசர்
ஒளிப்பதிவு : பாஸ்கரன் கே. எம்.
படத்தொகுப்பு : விவேக் ஹர்ஷன்
இயக்கம் : சூர்யா பிரபாகர்
தயாரிப்பாளர் : அருமை சந்திரன்

கதைக்களம்…

ஹீரோ வாசு (ஸ்ரீகாந்த்) ஒரு கார் கம்பெனியில் பணிபுரிகிறார். பார்த்தவுடன் ஹீரோயின் சாந்தி (நீலம்) மேல் காதல் கொள்கிறார். அதன்பின்னர் இரண்டு மூன்று பாடல்கள். இதனிடையில் ஜுனியர் பாலையா, சிறுவன் சித்தார்த் உள்ளிட்ட 5 பேர் ஸ்ரீகாந்தை உதவிக்கேட்டு பின்தொடர்கிறார்கள். ஒவ்வொருவரின் தேவையையும் தீர்த்து வைக்கிறார். ஆனால் உதவி செய்யும்போதுதான் அவர்கள் அனைவரும் மனிதர்கள் அல்ல. ஆவி என்பது தெரியவருகிறது. அதன்பின்னர் என்ன செய்தார்? என்பதே படத்தின் கதை.

இது சூர்யா நடித்த மாஸ்… அதாங்க ‘மாசு என்கிற மாசிலாமணி’ படத்தின் கதையாச்சே என்று கேட்கிறீர்களா? படத்தில் நடித்தவர்கள் பாவம் மாஸ் படத்தை பார்க்கவில்லையா? இல்லை அதற்கு முன் இப்படத்தை ஒப்புக் கொண்டார்களா? எனத் தெரியவில்லை. அட எல்லாம் படத்துலயும்தான் காதல் இருக்கு. அதற்காக பார்க்க இருக்கோமோ? என்று கேட்கிற நல்ல உள்ளங்களுக்காக மேலும் தொடர்கிறோம்.

கதாபாத்திரங்கள்…

ஸ்ரீகாந்த் கொடுத்த வேடத்தில் ஜஸ்ட் பாஸ் ஆகியிருக்கிறார். சோகமான காதல் பாடலில் கூட ப்ரெஷ்ஷாக தெரிகிறார். என்ன ஆச்சு சார்? நாயகி நீலம் ஒரு சில காட்சிகளில் கொஞ்சம் நடிக்க முயற்சித்திருக்கிறார். பெரிய வேடம் இல்லை என்பதால் டூயட் மட்டும் பாடி செல்கிறார்.

இவர்களுடன் வரும் மலையாள நடிகர் பைஜ்ஜீ காமெடி செய்ய நினைக்கிறார் போலும். கலாபவன்மணி போல் பேசியிருக்கிறார். அவ்வளவுதான்.

படத்தை கொஞ்சம் ரிலாக்ஸாக கொண்டு செல்பவர் மொட்டை ராஜேந்திரன். இவர் இங்கிலீஷ் பேசும்போது மட்டும் கொஞ்சம் சிரிக்கலாம். ‘டாடி மம்மி பப்பி ஷேம்…’ பாடலில் இவரது நடனம் ஓகே. இவர்களுடன் ஜுனியர் பாலையா, ஆடுகளம் நரேன், மாஸ்டர் சித்தார்த் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

நா முத்துகுமாரின் வரிகளில் விஜய் எபிநேசரின் பாடல்கள் கேட்கும் ரகம். ‘மழைத்துளி அழகா…’, ‘இதுதானா காதல் இதுதானா…’ மற்றும் ‘பப்பி ஷேம்…’ பாடல்கள் பாஸ் மார்க் பெறுகிறது.

பஸ் விபத்துக்குள்ளாகும் அந்த காட்சி அருமையான கிராபிக்ஸ். நிச்சயம் பார்ப்பவர் கண்கள் கலங்கும். இதுபோன்ற சில காட்சியில் ஒளிப்பதிவாளர் பாஸ்கரன் நிமிர்ந்து நிற்கிறார்.

படத்தின் ப்ளஸ்…

  • பஸ் விபத்து கிராபிக்ஸ் சீன்
  • பாடல்கள் + பாடல் வரிகள்

படத்தின் மைனஸ்…

  • காட்சிகளின் நாடகத் தன்மை
  • தேவையில்லாத 2 பாடல்கள்

எடிட்டர் விவேக் ஹர்ஷன் காட்சிகளில் கத்திரி வைத்திருக்கலாம். ஒவ்வொரு ஆத்மாவுக்கும் நீ….ண்ட காட்சிகள். இயக்குனர் சூர்யா பிரபாகர் இன்னும் கொஞ்சம் நன்றாக கொடுக்க முயற்சித்திருக்கலாம்.

மொத்தத்தில் ஓம் சாந்தி ஓம்… ஆவிகளின் நாடகம்!

Read  http://www.cinecoffee.com/review/om-shanthi-om-movie-review/

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்