பாபநாசம்

மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘த்ரிஷ்யம்’ தெலுங்கு கன்னட மொழிகளிலும் ரீமேக் ஆகி அதிலும் ஹிட்டானது. இந்நிலையில் அதே மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள ‘பாபநாசம்’ தமிழ் ரீமேக்கில் கமல் நடித்துள்ளார். இதிலும் ஹிட்டடிக்குமா என்பதை பார்ப்போம்…

நடிகர்கள் : கமல்ஹாசன், கெளதமி, சார்லி, கலாபவன் மணி, டெல்லி கணேஷ், எம்.எஸ். பாஸ்கர், நிவேதா தாமஸ், பேபி எஸ்தர், ஆஷா சரத்
இசையமைப்பாளர் : ஜிப்ரான்
ஒளிப்பதிவு : சுஜித் வாசுதேவ்
வசனம் : ஜெயமோகன்
இயக்கம் : ஜீத்து ஜோசப்

கதைக்களம்-

கேபிள் டிவி நடத்தும் சுயம்புலிங்கம் கமல் ஒரு சினிமா வெறியர். எந்நேரமும் படம் படம் என்று பைத்தியமாக இருப்பவர். நிறைய படங்களை பார்ப்பதாலும் தன் அறிவாற்றலாலும் கதையை முன்கூட்டியே கணிக்கக்கூடியவர். படிக்காத அப்பாவியாக இருந்தாலும் புத்திசாலி. கஞ்சத்தனம், குடும்ப பாசம், தெளிவாகத் திட்டமிடுவது என வாழ்ந்து வருகிறார். இவரின் மனைவி கௌதமி, பேபி எஸ்தர், நிவேதா தாமஸ் என அன்போடு வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் ஐ.ஜியின் மகன் கமலின் மூத்தமகளிடம் வம்பு செய்ய எதிர்பாராவிதமாக தற்காத்து கொள்ள கொலை செய்கின்றனர். இதன் பின்னர் தன் குடும்பத்தை கமல் எப்படி காப்பாற்றுகிறார்? அதற்கு அவரது சினிமா ஞானம் எப்படி உதவுகிறது என்பதை முழுப்படம் சொல்லும்.

கதாபாத்திரங்கள்-

தமிழ் சினிமாவில் வேறு ஒருவரையும் நினைத்து பார்க்க முடியாது என்றும் கூட சொல்லலாம். கமல் சுயம்புலிங்கமாக வாழ்ந்திருக்கிறார். ஒரு குடும்பஸ்தராக தன் குடும்பத்துக்காக எதையும் செய்யும் மனிதராக வாழ்ந்திருக்கிறார். ரொமான்ஸ் வசனங்களிலும் தான் இன்னமும காதல் மன்னன் என்பதை நிரூபித்திருக்கிறார்.

க்ளைமாக்ஸ் காட்சியின் வசனத்திற்கு தன் யதார்த்த நடிப்பின் மூலம் பலம் சேர்த்திருக்கிறார். நெல்லை பேசும் தமிழும் அதற்காக அவர் எடுத்த கொண்ட அக்கறையும் அந்த பாத்திரத்திற்கு அழகு சேர்த்திருக்கிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு கௌதமி. இரண்டு பெண் குழந்தைகளின் அம்மாவாக நடித்திருக்கிறார். ஒரு நடுத்தர குடும்பத்து அம்மாவாக மேட்ச் ஆகவில்லை. நடிப்பை கொடுத்திருந்தாலும், அதிக மேக்கப்… அதிக வயதான தோற்றம் ரசிக்க முடியவில்லை.

நிவேதா தாமஸ், பேபி எஸ்தர் இருவரும் தங்களை பணியை நிறைவாக செய்துள்ளனர். தன் தந்தைக்காகவும் தங்கள் குடும்பத்திற்காகவும் இவர்கள் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையும் சபாஷ் போட வைக்கும் ரகம்.

போலீஸ் ஐ.ஜி.யாக வரும் ஆஷா சரத் தனியாக தெரிகிறார். போலீஸாக கலாபவன் மணி, இளவரசு இருவரும் தங்கள் பாத்திரங்கள் கம்பீரத்துடன் தோன்றுகின்றனர். ‘நாயகன்’ கமலை போன்று ‘பாபநாசம்’ கமல் நல்லவரா, கெட்டவரா என தவிக்கு எஸ்.ஐ.யாக அருள் தாஸ் நடிப்பு அருமை. எம்.எஸ்.பாஸ்கர், டெல்லி கணேஷ் என அனைவரும் அவரவர் பாத்திரங்களில் பளிச்.

ஜிப்ரான் இசையில் இரண்டு பாடல்கள் தாலாட்டு பாடும் ரகம். பின்னணி இசையில் நன்றாகவே ஸ்கோர் செய்துள்ளார். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவில் கிராமத்து பசுமை கண்களை குளிர்ச்சியடைய செய்கிறது. சூழலுக்கு ஏற்றவாறு கேமராவை சுழற்றியிருக்கிறார். ஜெயமோகன் வசனங்கள் பெரும்பாலும் கைத்தட்டல் பெறுகிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் கூடுதலாகவே பெறுகிறது.

டீன்ஏஜ் பெண்கள் தங்கள் பிரச்சினையை பெற்றோரிடம் கலந்தோசிக்காவிட்டால் ஏற்படும் பிரச்சினைகளை அப்படமாக காட்டியுள்ளார் இயக்குனர். தமிழ் ரீமேக் என்பதால் தமிழ் மண்ணுக்காக கதையில் செய்த ஒருசில மாற்றங்கள் ரசிக்கும்படியாக உள்ளது. தமிழில் நேரடி தமிழ் படத்தை எப்போது இயக்க போகிறீர்கள்? காத்திருக்கிறோம் ஜீத்து ஜோசப் சார்.

மொத்தத்தில் பாபநாசம்… பாசத்திற்காக எதையும் செய்பவன்!

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்