பேய்கள் ஜாக்கிரதை விமர்சனம்

நடிகர்கள் : ஜீவரத்னம், ஷன்யா மகேஸ்வரி, தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், ஜெயபாலன், மனோபாலா மற்றும் பலர்.
இசையமைப்பாளர் : மரியா ஜெரால்டு
ஒளிப்பதிவு : மல்லிகார்ஜீன்
படத்தொகுப்பு : சுரேஷ் அர்ஸ்
இயக்கம் : கண்மணி
தயாரிப்பாளர் : ஜி. ராகவன்

கதைக்களம்…

ஊரில் பெரிய கோடீஸ்வரர் பழனிவேல் அண்ணாச்சி (தம்பி ராமையா). எல்லாம் இருந்தும் நிம்மதியில்லாமல் வாழ்கிறார். அதற்கு காரணம் பேய் பயம். எனவே மரணத்திற்கு பயமே இல்லாத ஒருவரை தன்னுடன் வைத்துக் கொள்ள நினைக்கிறார்.

இதனால் அங்கு வந்து சேரும் சரவணன் (ஜீவரத்னம்) தம்பி ராமையாவின் பேய் பயத்தை போக்குகிறார். ஆனால் காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயற்சிக்கிறார் ஜீவரத்னம். சாவின் விளிம்பு வரை சென்று வந்த இவருக்குள் நான்கு பேய் புகுந்து கொள்கிறது. இதனால் அவஸ்தைப்படும் அவர் என்ன செய்தார்? அந்த பேய்கள் இவர் கண்களுக்கு மட்டும் தெரிந்து இவருக்குள் வரக் என்ன காரணம்? தம்பி ராமையா என்ன ஆனார்? என்பதை இந்த பேய்கள் சொல்லும்.

கதாபாத்திரங்கள்…

இடைவேளை வரை ஹீரோ அண்ணாச்சி தம்பி ராமையாதான். மனிதர் பேய்க்கு பயந்து மனைவியை பிரிந்து இருப்பதும், கூடவே பாண்டி உள்ளிட்டோரை வைத்துக் கொண்டு அவஸ்தை படுவதும் செம ரகளை. ஆனால் அதுவே சில நேரத்திற்கு பிறகு அவஸ்தையாக மாறுகிறது.

ஹீரோ ஜீவரத்னம் கொஞ்சம் நடிக்க முயற்சித்திருக்கிறார். எக்ஸ்பிரசன்ஸ் முகத்தில் ஒட்ட மறுக்கிறது. ஹீரோயின் ஒரு பாடல், சில காட்சிகள் என வந்து செல்கிறார். இவரும் ஒட்டவில்லை காதலும் ஒட்டவில்லை.

நாயகியின் அப்பா மனோபாலா, தாய்மாமன் மொட்டை ராஜேந்திரன் இருந்தும் காமெடிக்கு ஏன் இவ்வளவு பஞ்சம் எனத் தெரியவில்லை. உங்கள நம்பி படத்துக்கு வந்தா இப்படி பண்டீங்களே பாஸ்?

இவர்களுடன் தெலுங்கு நடிகர் நரேஷ், கெஹனாவசிஸ்த், ஜான்விஜய், ‘ஆடுகளம்’ ஜெயபாலன், தருண்குமார் , ‘பிளாக்’ பாண்டி என அனைவரும் இருந்தும் சொல்லும்படியான காட்சிகள் இல்லை என்பது வருத்தமே.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பேய் படம் என்பதால் மல்லிகார்ஜுனின் ஒளிப்பதிவு ஆங்காங்கே பேசப்படுகிறது. அதுபோல் மரிய ஜெரால்டின் பின்னணி இசையும். சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பை இன்னும் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.

படத்தின் ப்ளஸ்…

  • தம்பி ராமையா காமெடி
  • உறவு பேய்கள்
  • க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்

படத்தின் மைனஸ்…

  • பழைய காமெடி டயலாக்
  • கோடீஸ்வரர் வீட்டில் அடிக்கடி பவர்கட்.. (ஜெனரேட்டர், இன்வெர்ட்டர் இல்லையா?)
  • ஒட்டாத காதல் + புதுமையில்லாத கதைக்களம்
  • பாடல்கள் + படத்தின் நீளம்

மாஸ் மற்றும் ஓம் சாந்தி ஓம் படத்தின் கதையா? என நினைக்கும் வேளையில் க்ளைமாக்ஸ் ட்விஸ்டில் கொஞ்சம் ஆறுதலை தருகிறார் இயக்குனர் கண்மணி. பேய்கள் ஆசையை விட ஹீரோ ஆசையை நிறைவேற்றி வைக்கும் காட்சிகள் ஓகே.

மொத்தத்தில் பேய்கள் ஜாக்கிரதை… பயப்படத் தேவையில்லை.

 

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்