பென்சில் திரை விமர்சனம்

நடிகர்கள் : ஜி.வி. பிரகாஷ், ஸ்ரீதிவ்யா, ஷரிக்ஹாசன், விடிவி கணேஷ், ஊர்வசி, டிபி கஜேந்திரன் மற்றும் பலர்.
இசை : ஜி.வி. பிரகாஷ்
ஒளிப்பதிவு : கோபி அமர்நாத்
படத்தொகுப்பு : ஆண்டனி
இயக்கம் : மணி நாகராஜ்
பிஆர்ஓ : நிகில் முருகன்
தயாரிப்பாளர் : எஸ்பி ராகவேஷ்

கதைக்களம்…

ஒரு ஹைகிளாஸ் மாடர்ன் பள்ளிக்கூடத்தில் +2 மாணவர் ஷாரிக் ஒரு மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். அவர் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் நடிகரின் மகன் ஆவார்.

அதன்பின், அந்த மாணவருக்கு எதிராக செயல்பட்டவர்கள் யார்? யார்? என்ற கதை விரிகிறது. இறுதியில் என்ன ஆனது? உண்மையான கொலையாளி யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பதே இந்த பென்சில்.

கதாபாத்திரங்கள்…

ஜி.வி.பிரகாஷுக்கு பள்ளி மாணவன் வேடம் கச்சிதம். அருமையான நடிப்பையும் கொடுத்துள்ளார். இவருடன் படம் முழுக்க பயணிக்கிறார் ஸ்ரீதிவ்யா. இருவரும் தங்கள் மாணவ பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

வில்லனாக நடித்திருக்கும் ஷாரிக்ஹசன், நிச்சயம் ரசிகர்களை கவருவார். ஒரு பணக்கார பையனின் திமிரை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். இவர் நட்சத்திர தம்பதிகள் ரியாஸ்கான்– உமா தம்பதியரின் வாரிசு.

இவருடன் மற்றொரு வில்லன் போல மிரட்டும் திருமுருகனும் கவனிக்கதக்கவர். இவருக்கு ரொமான்ஸ் வரவில்லையென்றாலும், சுஜா வருணி அதில் தேர்ச்சி பெறுகிறார். ஆசிரியர்கள் என்றாலும் அவர்களின் காதல் சில்மிஷம் ஓகேதான்.

இவர்களுடன் டி.பி.கஜேந்திரன், விடிவி கணேஷ், அபிஷேக், ஊர்வசி, மிர்ச்சி ஷா ஆகியோர் நம்மை அவர்களின் அனுபவ நடிப்பால் கவர்கின்றனர்.

pencil poster

தொழில்நுட்ப கலைஞர்கள்…

G.V.பிரகாஷின் இசையில் இரண்டு பாடல்கள் ஓகே. கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு ரசிக்க வைத்து, படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. ஆண்டனியின் எடிட்டிங் இன்னும் கொஞ்சம் கட் செய்திருக்கலாம்.

படத்தின் ப்ளஸ்…

  • ட்விஸ்ட்கள் நிறைந்த அருமையான ஸ்கூல் த்ரில்லர் சப்ஜெக்ட்
  • ஹீரோ + ஹீரோயின் ரொமான்ஸ் பாடல்
  • பின்னணி இசை சில இடங்களில் கைகொடுக்கிறது.
  • கல்வியை விற்கும் பள்ளிகளுக்கு சவுக்கடி தரும் க்ளைமாக்ஸ் வசனங்கள்
  • கலர்புல்லான பள்ளிக்கூட கேம்பஸ்

Shariq Haasan

படத்தின் மைனஸ்…

  • மிகப்பெரிய பள்ளிக்கூடத்தில் அவ்வளவு எளிதாக யாரும் நுழைய முடியாது. அப்படியே நுழைந்தாலும் எவர் கண்ணிலும் படாமலும் இருக்கமுடியாது. ஆனால் பலர் வந்து, குடோனில் ஒளிந்து கொள்வது வேடிக்கையானது.
  • ஆசிரியர்கள் அறையில் யாருமே இருக்கமாட்டார்களா? ஜிவி பிரகாஷ், ஸ்ரீதிவ்யா இருவரும் மாறி மாறி அங்கு செல்கின்றனர். பின்னர் லைப்ரரி செல்கின்றனர். அங்கும் யாருமே இல்லையா?
  • கொலையை இவர்களே கண்டுபிடிக்க எடுக்க முயற்சிகள் எல்லாம் ரொம்பவே ஓவர்தான்.
  • தன் மகன் கொல்லப்பட்ட பின்பும், சூப்பர் ஸ்டார் ஒன்றுமே சொல்லவில்லையே?
  • கொலையாளிகள் யாராக இருக்கக்கூடும் என ட்விஸ்ட் மேல் ட்விஸ்டுகளை குவித்திருக்க வேண்டாம்.

pencil poster 1

இயக்குனர் மணி நாகராஜின் முதல் முயற்சியே நன்றாக வந்துள்ளது. ஒரு கமர்ஷியல் கதையை எடுக்காமல், பள்ளிகளின் இன்றைய அவலத்தை கொடுத்தற்காக அவரை நிச்சயம் பாராட்டலாம்.

பள்ளிக்கூடத்தை தவிர குடும்பம் என எதையும் காட்டவில்லை. ஒரே விஷயத்தை நீண்ட நேரம் காண்பிப்பதால் கொஞ்சம் போர் அடிக்கிறது.

மொத்தத்தில் பென்சில்… மோசமான கல்வி நிர்வாகத்தை கொல்லும்..!

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்