பிச்சைக்காரன் விமர்சனம்

பொதுவாகவே நெகட்டிவ்வான டைட்டில் வைத்தால் படம் ஓடாது என்றொரு டாக் திரையுலகில் இருக்கிறது. ஆனாலும் துணிச்சலாக அதுவும் பிச்சைக்காரன் என்றொரு டைட்டிலை வைத்திருக்கின்றனர் இப்படக்குழுவினர்.

இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், எப்படி பாஸிட்டிவ்வாக மாற்றியிருக்கிறார் பிச்சைக்காரன் என்பதை பார்ப்போம்…

நடிகர்கள் : விஜய் ஆண்டனி, சட்னா டைட்டஸ், பகவதி பெருமாள், முத்துராமன் மற்றும் பலர்.
இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி
ஒளிப்பதிவு : பிரசன்ன குமார்
படத்தொகுப்பு : வீர செந்தில் ராஜ்
இயக்கம் : சசி
தயாரிப்பாளர் : பாத்திமா விஜய் ஆண்டனி

கதைக்களம்…

கோடீஸ்வரன் விஜய் ஆண்டனி, விபத்தில் அடிபட்டு கோமாவில் இருக்கும் தன் தாயை காக்க வேண்டி ஒரு மண்டலம் (அதாவது 48 நாட்கள்) யாருக்கும் தெரியாமல் பிச்சைக்காரனாக வாழ நினைக்கிறார்.

இதனிடையில் ஒரு சந்தர்ப்பத்தில் இவர் மீது காதல் கொள்கிறார் நாயகி. மற்றொரு புறம் அவரது சொத்தை அபரிக்க நினைக்கிறார் பெரியப்பா. மறுபுறம் வில்லன் கோஷ்டியினர் அவன் பிச்சைக்காரன் இல்லை என்று தெரிந்து கொல்ல பார்க்கின்றனர்.

அவர் தன் விரதத்தை முடித்து தன் தாயை காப்பாற்றினாரா? காதலியுடன் கை சேர்ந்தாரா? இறுதியில் என்ன ஆனார் என்பதே பிச்சைக்காரனின் கதை.

கதாபாத்திரங்கள்…

படம் முழுக்க பிச்சைக்காரனாய் வாழ்ந்திருக்கிறார் விஜய் ஆண்டனி. தன்னால் இந்த கேரக்டரிலும் ஜொலிக்க முடியும் என டாப் ஹீரோக்களுக்கு சவால் விட்டிருக்கிறார்.

?????????????????????????????????????????????????????

அம்மா சென்டிமெண்ட், நாயகியுடன் அளவான காதல், வில்லனுடன் அதிரடி மோதல் என அனைத்திலும் நன்றாகவே தேர்ச்சி பெற்றுள்ளார்.

டிராபிக் போலீஸிடம் மாட்டிக்கொண்டு பிச்சை எடுத்த காட்சிகளை சொல்லும்போது சபாஷ் பெறுகிறார். பைத்திய பெண்மணிக்கு உதவுவதிலும், தன் செல்வாக்கை எந்தவொரு இடத்திலும் காட்டாமலும் அசத்தியிருக்கிறார்.

நாயகி சாட்னா டைட்டஸ். மகிழினி கேரக்டரில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தருகிறார். காதலை விட முடியாமலும், தோழிகளிடம் திட்டு வாங்குபோதும் தவிக்கும் காட்சிகள் இவருக்கு பாஸ் மார்க்கை அள்ளிக் கொடுக்கின்றன. இவரது கண்களும் ஆங்காங்கே நடித்திருக்கின்றன.

நண்பர் பகவதி பெருமாள், விஜய் ஆண்டனியின் அம்மா புவனேஸ்வரி, வில்லன் முத்துராமன், பிச்சைக்கார நண்பர் மூர்த்தி, டீக்கடை செந்தில், டிரைவர் சிவதாணு என அனைவரும் மனதில் நிற்கிறார்கள்.

???????????????????????????????????????

தொழில்நுட்ப கலைஞர்கள்..

பிரசன்னகுமாரின் ஒளிப்பதிவில் பிச்சைக்காரர்கள் வாழ்க்கை, ஒரு டூயட் பாடல், மழை பாடலில் நாயகன் நாயகியிடன் பிச்சை எடுப்பது என அனைத்தும் கச்சிதம்.

நாயகனே இசையமைப்பாளர் என்பதால் குரல்களையும் பாடல் வரிகளையும் சரியாக பயன்படுத்திருக்கிறார். ஜானகி ஐயர் குரலில், உனக்காக வருவேன், நெஞ்சோரம் பாடல்கள் மனதில் நிற்கும்.

படத்தின் ப்ளஸ்…

  • திரைக்கதை + உருவாக்கம்
  • கேரக்டர்கள் தேர்வு
  • பலே வசனங்கள்

உதாரணத்திற்கு…

  • தினமும் பிச்சைக்கார மேக்கப் போடனுமா என நாயகன் அப்பாவியாக கேட்க, நம்ம ஹீரோஸ் எல்லாம் நாலு படம் நடிச்சா, அழகாயிடுவாங்களா என்ன? நமக்கு பாத்து பழகிப்போச்சு அதான்.
  • தபால் போடுறவன் தபால்காரன், பிச்சைப்போடுறவன் பிச்சைக்காரனா?
  • மாலை 6 மணிக்கு மேல பிச்சைக்காரனுக்கும் ஒரு லைப் இருக்கு
  • எண்ட காதலி நிண்ட மனைவி ஆகலாம்…. பட்சே ‘அந்த 7 நாட்கள்’ டயலாக்…
  • பிச்சைக்காரனா இருந்தபோ வெட்கப்படல இப்போ ஒரு பணக்காரனா வெட்கப்படுறேன்..
  • ஆடிக்காரனே ஆடிப் போயிட்டான்…

இப்படி பல வசனங்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளன.

pichaikaran Satna Titus

நான் கடவுள் படம் போல் முழுதும் பிச்சைக்காரன்களாக இல்லாமல் தேவைக்கேற்ப காட்சி வைத்திருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம்.

தான் நேசிக்கும் ஒரு உயிருக்கு உயிர் கொடுக்க, தன்னை வருத்திக் கொண்டு, மண் சோறு சாப்பிடுவது போன்றுதான் ஒரு மண்டலத்திற்கு பிச்சை எடுப்பதும் என்பதை நாசூக்காக சொல்லிவிட்டார்.

பிச்சைக்காரன் தட்டில் இருப்பது போன்று அனைத்தையும் (காதல், மோதல், ஆக்ஷன், சென்டிமெண்ட், காமெடி, சிந்திக்க) கலந்து கொடுத்தாலும், ரசிக்கும்படி செய்திருக்கிறார் சசி.

மொத்தத்தில் பிச்சைக்காரன்… ரசிகன் மனதில் பணக்காரன்..!

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்