போக்கிரி ராஜா விமர்சனம்

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தை தொடர்ந்து ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ள படம் இது. அதிலும் இது ஜீவாவின் 25வது படம் என்பதாலும் இமான் இசையில் பாடல்கள் ஹிட்டடித்ததாலும் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த போக்கிரி ராஜா ரசிகர்களை கவர்ந்தாரா? என்பதை பார்ப்போம்..?

நடிகர்கள் : ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா, மனோ பாலா, யோகிபாபு, ராம்தாஸ், சித்ரா லட்சுமணன், மயில்சாமி மற்றும் பலர்.
இசையமைப்பாளர் : இமான்
ஒளிப்பதிவு : அஞ்சி
படத்தொகுப்பு : வி ஜே ஷாபு ஜோசப்
இயக்கம் : ராம்பிரகாஷ் ராயப்பா
தயாரிப்பாளர் : பிடி செல்வகுமார்

கதைக்களம்…

அரை மணி நேரத்திற்கு ஒருமுறை கொட்டாவி விடுவதே நாயகன் ஜீவாவின் பெரிய வேலையும் பிரச்சினையும். இவரின் நண்பர் யோகிபாபுவின் சிபாரிசு பேரில் மனோபாலா, ஹன்சிகா வேலை செய்யும் கம்பெனியில் சேர்கிறார்.

பார்ட் டைம் ஆக சமூக சேவை செய்யும் ஹன்சிகாவிடம் சேர்ந்து இவரும் சேவைகள் செய்கிறார். ஒரு சூழ்நிலையில், ரவுடி கூலிங் கிளாஸ் குணாவை (சிபிராஜ்) அவமானப்படுத்துகிறார்.

இதனால் சிபி, ஜீவாவை துரத்த, தன் கொட்டாவி வியாதி மூலம் பல பிரச்சினைகளை எப்படி சந்திக்கிறார் என்பதே படத்தின் கதை.

கதாபாத்திரங்கள்…

கொட்டாவி ராஜா.. ஸாரி நாயகன் ஜீவா புதுமாதிரியான கதையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சித்திருக்கிறார். ஆனால் பெரிதாக வேலையில்லை. அடிக்கடி கொட்டாவி விட்டு விட்டு படம் பார்க்கும் நம்மையும் கொட்டாவி விடச் செய்திருக்கிறார்.

ஹன்சிகா துறுதுறுவென வருகிறார். இவர் ஜீவாவுடனே சுற்றினாலும், இவருக்கு மட்டும் கொட்டாவி வரவில்லை. காதல் வருகிறது. அது எப்படி வந்தது என்றெல்லாம் கேட்கக் கூடாது.

பயங்கர பின்னணி இசையுடன் அடிக்கடி என்ட்ரீ கொடுக்கிறார் சிபிராஜ். கண் தெரியாமல் போனபிறகு அவர் செய்யும் சேட்டைகள் ரசிக்க வைக்கிறது. இவருடன் வரும் ராமதாஸ் (முனீஷ்) தன் பங்குக்கு சேட்டைகள் செய்து ரசிக்க வைக்கிறார்.

யோகிபாபு கொட்டாவி விடும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார். இவர்களுடன் மனோபாலா, மயில்சாமி, சித்ரா லட்சுமணன் ஆகியோரும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இமான் இசையில் அத்துவுட்டா பாடல் தாளம் போட வைக்கும். மற்றபடி பாடல்கள் பெரிதாக கைகொடுக்கவில்லை. ஒளிப்பதிவாளர் ஆஞ்சி பாஸ்மார்க் பெறுகிறார்.
எடிட்டர் வி ஜே ஷாபு ஜோசப் இன்னும் கத்திரி போட்டிருக்கலாம்.

படத்தின் ப்ளஸ்…

  • கலைஞர்கள் தேர்வு
  • காமெடி கதை

படத்தின் மைனஸ்…

  • தன் 25து படத்தில் கொட்டாவி கதையா ஜீவா?
  • சுவாரஸ்யம் இல்லாத காட்சிகள்.
  • பல காட்சிகளில் நாடகத்தன்மை

திருப்பமான இடைவேளை காட்சி, கொட்டாவி பிரச்சினை என ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டு அதை அதிசய சக்தி என்று சொல்லி காதில் பூ சுற்றியிருக்கிறார் இயக்குனர்.

பொது இடத்தில் சிறுநீர் கழித்தால் இதுபோன்ற சில சின்ன சின்ன தண்டனைகள் கொடுக்கலாம் என்ற ஒரு மெசேஸ் சொன்னதற்காக இயக்குனருக்கு பாராட்டைத் தெரிவிக்கலாம்.

மொத்தத்தில் போக்கிரி ராஜா… கொட்டாவி ராஜ்யம்..!

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்