புலி விமர்சனம்

விஜய்யின் ஒவ்வொரு படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் இப்போது வெளியாகும் ‘புலி’ படத்திற்கு படத்தைப் போலவே பிரம்மாண்ட எதிர்பார்ப்புள்ளது. இந்த ‘புலி’ பாய்ச்சல் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்…

நடிகர்கள்  : விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், பிரபு, நந்திதா, ரோபா சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, வித்யூலேகா மற்றும் பலர்.
இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீபிரசாத்
ஒளிப்பதிவு : நட்டி என்ற நட்ராஜ்
இயக்கம் : சிம்புதேவன்
தயாரிப்பாளர் : பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீம்

கதைக்களம்

பிரபு குருவி கூட்டில் இருந்து எடுக்கும் குழந்தை விஜய்யை வளர்க்கிறார். கூடவே முட்டையில் இருந்து வந்த பறவையும் வளர்கிறது. ஒரு கட்டத்தில் இவர்களை அடிமையாக நடத்தும் வேதாளம் கோட்டையின் வில்லன்கள் பிரபுவை கொன்றுவிட்டு விஜய்யின் மனைவி ஸ்ருதியை தூக்கி சென்று விடுகின்றனர். அவரை மீட்பதற்காகவும் வேதாளம் கோட்டை வீரர்களை வெல்வதற்காகவும் சக்தி நிறைந்த பானத்தை அடிக்கடி அருந்துகிறார் விஜய்.

ஆனால் நேரிடையாக மோதாமல் வேதாளக் கோட்டையின் ராணி ஸ்ரீதேவி மற்றும் அவருடைய தளபதி சுதீப்பை தன் விவேகத்தால் வெல்ல நினைத்து நுழைகிறார். அங்கு சென்றபின்னர்தான் பானம் அருந்தாமலே தனக்கு சக்தி இருப்பதை உணர்கிறார். அப்படியென்றால் இவர் யார்? இவரும் வேதாளம் மனிதர்களில் ஒருவரா? மனைவியை மீட்டாரா? வெற்றிக் கொடி நாட்டினாரா? என்ற பல கேள்விகளுக்கு புலியின் மீதிக் கதை விடை சொல்லும்.

கதாபாத்திரங்கள்…

விஜய் இதுவரை ஏற்காத அரசர் காலத்து கேரக்டர். ஆனால் விஜய்க்கு அதே தோற்றம்தான். ஆரவாரமில்லாத அருமையான அறிமுகம். ப்ளாஷ்பேக் வரும் புலித்தேவன் படத்தின் ப்ளஸ். படத்தில் மிக இளமையாக பளிச்சிடுகிறார். நடனங்களில் அசத்தல். சண்டை காட்சிகளில் அனல் பறக்க செய்கிறார் விஜய்.

ஆனால் புராணக் காலத்து காட்சியுடன் ஒன்றாத பன்ச் வசனங்கள். வேண்டுமென்ற புகுத்தபட்ட அரசியல் நெடி வசனங்கள்.

ஸ்ருதி கவர்ச்சி தரிசனம். ஆனால் அவருடைய குரல்? ஆனால் பாடும்போது குயில். ஹன்சிகா, இளவரசியாக கொள்ளை அழகுடன் அனைவரையும் கவர்கிறார்.

இவர்களைத் தவிர்த்து பளிச்சிடும் முக்கியமான இரண்டு கேரக்டர்கள் ஸ்ரீதேவி மற்றும் சுதீப். ராணியாக வரும் ஸ்ரீதேவி நடிப்பிலும் வசன உச்சரிப்பிலும் அசத்தியுள்ளார். சுதீப் மிரட்டலான கம்பீர வில்லன்.

இவர்களுடன் தம்பி ராமையா, சத்யன், பிரபு, நந்திதா விஜயகுமார், சங்கிலி முருகன், ரோபா சங்கர், இமான் அண்ணாச்சி, வித்யூலேகா, கருணாஸ், ஆடுகளம் நரேன் என ஒரு நீண்ட நட்சத்திர பட்டாளம். அவர்களுக்கு ஏற்ற பாத்திரங்களில் பாஸ் மார்க் பெறுகிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தேவி ஸ்ரீபிரசாத் இசையில் ‘புலி புலி’ மற்றும் ‘ஜிங்கிலியா ஜிங்கிலியா’ ஆட்டம் போடும் ரகம் என்றால் ‘ஏண்டி ஏண்டி’ பாடல் அழகான மெலோடி. பாடல்களை கண்களுக்கு விருந்தாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் நட்டி நடராஜ்.

படத்தின் ப்ளஸ்

 • கிராமத்து உடைகள் + அரண்மனை செட்கள்
 • விஜய்யின் நடனம் + மேனரிசம்
 • நட்டியின் ஒளிப்பதிவு
 • ஸ்ரீதேவியின் நடிப்பு + சுதீப்பின் வில்லத்தனம்
 • பெரிய ஆமை

படத்தின் மைனஸ்

 • காட்சிக்கு பொருந்தாத அரசியல் வசனங்கள்
 • பொருந்தாத குத்து பாடல்கள்
 • கதைக்கு பொருந்தாத ஹீரோ + ஹீரோயின் உடைகள்
 • கிராபிக்ஸை காட்டி கொடுக்கும் காட்சிகள்
 • கருஞ்சிறுத்தை பயந்து ஓடுவது
 • குழந்தைகளுக்காக சேர்க்கப்பட்ட குள்ள மனிதர்கள்

விஜய் படம் என்பதால் பிரம்மாண்டம் வேண்டும் என்பதற்காக தேவையில்லாத கிராபிக்ஸ் காட்சிகள். சிம்புதேவன் இயக்கிய 23ஆம் புலிகேசியில் அந்தக் காலத்து வசனங்களும் யதார்த்தமான நகைச்சுவை இருந்தது. ஆனால் இதில் வசன உச்சரிப்புகள் பொருந்தவில்லை. செட் பணிகளில் ஆர்ட் டைரக்டர் கவனம் செலுத்தியிருக்கலாம்.

பின் குறிப்பு : சாமி சத்தியமாக நாங்கள் பாகுபலியுடன் ஒப்பிடவில்லை.

மொத்தத்தில் புலி… மிரட்டியிருக்கலாம்!

Puli Review in English

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்