விஜய்யின் ‘புலி’ பாடல் விமர்சனம்

விஜய்யின் சினிமா கேரியரில் மிகபிரம்மாண்டமான படம் என்ற அடையாளத்துடன் வெளியாகிறது புலி’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் பிரம்மாண்டமாகவே வெளியாகியுள்ளது. கவிஞர் வைரமுத்துவின் வரிகளுக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.  இப்படத்தின் பாடல்கள் எப்படி? என்பதை பற்றிய ஒரு பார்வை இதோ

1) ஏண்டிஏண்டி..
பாடலாசிரியர் : வைரமுத்து
பாடியவர்கள்   : விஜய், ஸ்ருதிஹாசன்

வானவில் வட்டமாகுதே! வானமே கிட்ட வருதே! மேகங்கள் மண்ணில் இறங்கி…. தோகைக்கு ஆடை கட்டுதே..இரவெல்லாம் வெயில் ஆகி போக… பகல் எல்லாம் இருள் ஆகி போக…. பருவங்கள் வேஷம் போடுதே………… அடி ஏண்டி ஏண்டி என்னை வாட்டுற….

இப்பாடல் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் அனைவருக்கும் பிடிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. இதன் இசையும் வரிகளும் அனைவரையும் கவர்ந்துள்ளது. இப்பாடலுக்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக விஜய், ஸ்ருதி இருவரின் குரல்களும் பொருத்தமாய் உள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பாடல் இது.

 

2) ஜிங்கிலியா..
பாடியவர்கள்   : ஜ்ஜாவேத் அலி, பூஜா

விஜய் ரசிகர்களுக்கு ஏற்ற ஒரு குத்து பாடல் இது. குழந்தைகளை கவரும் வகையில் முதல் வரி ஆரம்பமானாலும் பாடலில் அதற்கான சுவாரசியம் இல்லை. இது எல்லா தரப்பு ரசிகர்களையும் கவருமா எனத் தெரியவில்லை.

 

3) சொட்டவாளா..
பாடியவர்கள்   : சங்கர் மகாதேவன், மானஸி

சொட்டவாளா சுந்தரி பற்றியும்…. சுந்தரனை பற்றியும் அவர்களின் கிச்சு கிச்சு காதலை பற்றிய பாடல் இது. காதலனை காதலி வர்ணிப்பதும்காதலியை காதலன் வர்ணிப்பதுமாக உள்ளது. பாடல் வரிகள் இன்னும் பாடலுக்கு பலம் சேர்த்து இருக்கலாம். கேட்ட வரிகளாக உள்ளது.

4) மன்னவனேமன்னவனே..
பாடியவர்கள்   : சூரஜ் சந்தோஷ், சின்மயி, அனிதா, கார்த்திகேயன்

இது காதல் பாடலாக இருந்தாலும் போர் வீரனையும் காதலையும் கலந்து காதலனை களம் காண அழைக்கிறாள் காதலி. கத்தியின்றி வேல்விழியால் கொலை செய்தாய் என தான் காதலில் வீழ்ந்ததை கூறுகிறாள்.

 

5) புலி டைட்டில் சாங்..
பாடியவர்கள்   : மனோ, ப்ரியதர்ஷினி

புலி போன்ற வீரம் கொண்ட ஒருவனின் புகழ் பாடும் பாடல் இது. நிச்சயம் விஜய் ரசிகர்களுக்கு இது ஒரு விருந்துதான். ஆனால் பாட்டில் ஸ்பீடு இல்லை. இடையில் குறைந்து பின்னர் வேகம் கூடுகிறது.

 

6) மனிதா.. மனிதா..
பாடியவர்   : டிப்பு

இந்தப் பாடல் மனிதனின் தன்மானத்தை பற்றியும் அவனுடைய போராட்டத்தையும் பற்றி சொல்கிறது. மேலும் இளைஞர்களையும், போருக்கான வீரத்தையும் எடுத்துரைப்பதாக இருக்கிறது. வஞ்சகம், சூழ்ச்சி உள்ளிட்டவைகளை வென்று தலைமுறைகள் வெல்ல சில தலைகளை இழப்பதில் தவறில்லை. எனவே புலி படையுடன் புறப்பட வாஎன உணர்ச்சி பூர்வமாக இப்பாடல் உள்ளது.

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்