சவாலே சமாளி

‘சூது கவ்வும்’ என்ற வெற்றிப்படத்தில் அறிமுகமாகி ‘தெகிடி’ படத்தில் தனி ஹீரோவாக களம் இறங்கினார் அசோக் செல்வன். இதனின் வெற்றியைத் தொடந்து தற்போது பிந்து மாதவியுடன் ‘சவாலே சமாளி’ என களம் கண்டுள்ளார். இந்த சவாலை எப்படி சமாளித்துள்ளார் என்பதை பார்ப்போம்…

நடிகர்கள் :
அசோக் செல்வன், பிந்து மாதவி, நாசர், ஊர்வசி, எம்.எஸ். பாஸ்கர், ஐஸ்வர்யா, கருணாஸ், ஜெகன், மனோபாலா, பரவை முனியம்மா மற்றும் பலர்
இசையமைப்பாளர் : தமன்
ஒளிப்பதிவு : ஷெல்வகுமார்
இயக்கம் : சத்யசிவா
தயாரிப்பாளர் : நடிகர் அருண்பாண்டியன், கவிதா பாண்டியன்

கதைக்களம்….

டாப் டிவியில் பணி புரியும் கார்த்திக் (அசோக் செல்வன்) தன் தங்கையின் தோழி திவ்யாவை (பிந்து மாதவி) காதலிக்கிறார். அசோக்கின் நண்பர் பில்லா (ஜெகன்) இவர்கள் இருவரும் கருணாஸின் டாப் டிவியின் டிஆர்பி ரேட்டை உயர்த்த காதலர்களை சேர்த்து வைக்கும் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

இதற்காக சில கூத்து கலைஞர்களை செட்டப் செய்து நிகழ்ச்சி ரேட்டிங்கை நடிகை ஊர்வசி மூலம் உயர்த்துகின்றனர். ஆனால் ஒரு நிஜக்காதலர்கள் இவர்களின் உதவியை நாட, அவர்களை சேர்த்துவைக்க இவர்கள் செய்யும் எடிட்டிங் சமாச்சாரங்களே சவாலே சமாளி…

கதாபாத்திரங்கள்…

அசோக் செல்வன் பெண்கள் பின்னாடி சுற்றி ஜொள்ளு விடுவதில் கைதேர்ந்து இருக்கிறார். தெகிடியில் இல்லாத ஒரு மாறுபட்ட கேரக்டர். காமெடிக்கு ட்ரை செய்திருக்கிறார். பாடல் காட்சிகளின் இன்னும் ரொமான்ஸ் + டான்ஸ் தேவை.

ஜெகன் இவருடன் நண்பராக இணைந்துள்ளார். தன் பங்கை சமாளிக்க நிறையவே முயற்சித்துள்ளார். சில காமெடியை ரசித்தாலும் நிறைய காட்சிகளில் காம’நெடி’ அதிகமாகவே உள்ளது. அதுவும் ஆன்ட்டி மேட்டர் வசனங்கள் செம.

பிந்து மாதவிக்கு பெரிய வேலை இல்லை. தன் பங்கை கொஞ்சம் செய்துவிட்டு க்ளைமாக்ஸில் எங்கே போனார் என்றே தெரியவில்லை. ஹீரோவை வெறுக்கும் இவர் பின்பு எப்படி சம்மதித்தார் என்பதற்கு தெளிவான காட்சிகள் இல்லை.

பரவை முனியம்மா சிறிது நேரமே வந்தாலும் பாட்டி + பார்ட்டி சீன்களில் கலக்கியுள்ளார். தண்ணி அடித்துவிட்டு கலாட்ட செய்வது நல்ல ரகம்.

இவர்களுடன் ஊர்வசி, கருணாஸ், மனோபாலா, நிரோஷா, எம்.எஸ். பாஸ்கர், நாசர் என அனைவரும் அவர்களது பங்கை சிறப்பாகவே செய்துள்ளனர். ஆனால் இவர்களை நன்றாக பயன்படுத்த வேண்டிய இயக்குனர் கோட்டை விட்டுள்ளார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

தமனின் இசையில் ஒரு ஆம்பள நல்லவனா கெட்டவனா பாடல் நடனம் ஆடவைக்கும். எப்போதும் குடித்துவிட்டு பெண்களை திட்டி ஆண்கள் பாடுவதற்கு பதிலாக இதில் பெண்களை பாடவிட்டுள்ளனர். ஆண்களை கலாய்க்க பெண்களுக்கு ஒரு பாட்டு கிடைத்து விட்டது.

ஷெல்வகுமார் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் ஓகே. மற்ற டிவி காட்சிகள் சொல்லும்படியாக இல்லை.

முதல் பாதி ஏதோ ஒரு ரூட்டில் பயணித்தாலும் பார்க்கும் படியாக உள்ளது. இரண்டாம் பாதி முழுவதும் டிவிக்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். கொஞ்சம் இல்ல நிறையவே கவனித்திக்கலாம்.

மொத்தத்தில் சவாலே சமாளி… ஏதோ சமாளித்திருக்கிறார்கள்.

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்