சவாரி விமர்சனம்

முற்றிலும் நிறைய புதுமுகங்கள் இணைந்து உருவாக்கியுள்ள படம் சவாரி. இவர்களின் முதல் சவாரி எப்படி என்பதை பார்த்து வருவோம்…

நடிகர்கள் : பெனிட்டோ, சனம் செட்டி, கார்த்திக் யோகி, மதிவாணன், TM கார்த்திக், அருண் அலெக்சாண்டர், பாண்டியன், முனிஷ்காந்த், கவிதாலயா கிருஷ்ணன், லொள்ளுசபா ஈஸ்டர் மற்றும் பலர்.
இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்
ஒளிப்பதிவு : செழியன்
படத்தொகுப்பு : கிஷோர் டி.இ.
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா
இயக்கம் : குகன் சென்னியப்பன்
தயாரிப்பாளர் : வெண் கோவிந்தா

கதைக்களம்…

தமிழகம் மற்றும் ஆந்திரா எல்லைப் பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் லிப்ட் கேட்டு ஏறும் மர்ம நபர் சைக்கோ ஒருவனால் பலபேர் கொல்லப்படுகிறார்கள்.

இதனை விசாரிக்க போலீஸ் உயர் அதிகாரி பெனிட்டோ ப்ராங்ளின் நியமிக்கப்படுகிறார். அவருக்கு நாளை திருமணம் ஆந்திராவில் நடைபெறவுள்ள நிலையில் அதே நெடுஞ்சாலையில் தனியாக பயணம் செய்கிறார். அப்போது கார் ரிப்பேர் ஆகிவிடுகிறது.

 

Sawaari still1

 

இதனிடையில், அதே நாளில், நடைபெறவிருக்கிற தேர்தலுக்காக மனுதாக்க செல்லவிருக்கும் எம்எல்ஏ பொன்மலை தன் ராசியான காரை எடுத்து வர சொல்லி, ஒரு மெக்கானிக்கிடம் சொல்கிறார்.

மெக்கானிக் காரை எடுத்து வரும் வழியில், போலீஸ் பெனிட்டோ லிப்ட் கேட்டு ஏறுகிறார். சில மைல்களுக்கு பின்னர் அந்த சைக்கோ கொலைக்காரனும் லிப்ட் கேட்டு ஏறுகிறார்.

 

DCIM (32)

 

அதன்பின்னர் அந்த தேசிய நெடுஞ்சாலையில் இவர்கள் மூவரும் மேற்கொள்ளும் பயணமும் அந்த சுவாரஸ்ய திருப்பங்களுமே இந்த சவாரி.

கதாபாத்திரங்கள்…

படத்தின் நாயகன் போலீஸ் பெனிட்டோ. போலீஸ்க்கே உரிய அந்த கம்பீரம் முறுக்குடன் இருக்கிறார். நாளை தன் திருமணத்தை வைத்துக் கொண்டு அவசரமாக செல்லும்போது தன் கடமையை செய்ய நினைக்கும் இவர் சபாஷ் பெறுகிறார்.

மெக்கானிக் தம்பி ரவியாக வரும் கார்த்திக் யோகி. கைத்தட்டலை அடிக்கடி பெறுகிறார். சைக்கோவிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் அந்த காட்சிகளில் அவரின் முகபாவனைகளில் பயம் கலந்த சிரிப்பு செம.

 

sawaari still2

 

படபடவென பேசிக்கொண்ட எல்லாவற்றையும் சைக்கோவிடம் உளறி வைப்பதும் ரசிக்க வைக்கிறது.

சைலண்டாக இருந்து சைக்கோ செய்யும் சாகசங்கள் அனைத்தும் படு சுவாரஸ்யம்.

மிரட்டல் எம்எல்ஏவாக அருண் அலெக்ஸாண்டர். கேரக்டருக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார். தன் அடியாட்களை மிரட்டி வேலை வாங்குவது அருமை.

 

sawaari still3

 

போலீஸ் கணேஷ் ஆக வரும் பாண்டியன் சில காட்சிகள் என்றாலும் தன் கேரக்டரை மனதில் நிறுத்துகிறார். மற்ற போலீசை மிரட்டி வேலை வாங்குவது பல அதிகாரிகளை நினைவுப்படுத்துகிறார்.

எம்எல்ஏவின் அடியாளாக முனிஸ்காந்த் மற்றும் லொள்ளு சபா ஈஸ்டர். இவர்களுக்கு பெரிய வேலையில்லை. ஆனாலும் ஓகே.

என்னடா எல்லாரையும் சொல்லிட்டோம். நாயகி பத்தி கேட்கிறீங்களா…? அவங்களுக்கே படத்துல சீன் இல்ல. அப்புறம் என்ன சொல்ல..? ஸாரி சனம் ஷெட்டி.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும் மற்றும் செழியனின் ஒளிப்பதிவில் காட்சிகள் படத்திற்கு பெரிய பலம். நெடுஞ்சாலை பயணம் என்றாலும் அதற்கான லொக்கேஷன், மலைப்பகுதி, காட்டுப்பகுதி என கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார் செழியன்.

 

DCIM (7)

 

 

எடிட்டர் கிஷோரின் கைவண்ணத்தில் முதல் பாதி ஓகே. இரண்டாம் பாதிதான் கொஞ்சம் நீளம்.

படத்தின் ப்ளஸ்…

  • படத்தின் பலம் ஒளிப்பதிவு + பின்னணி இசை
  • ஆரம்பம் முதலே க்ளைமாக்ஸ் வரை திரைக்கதையில் உள்ள ட்விஸ்ட்டுக்கள்.
  • சைக்கோ கொலைக்காரன் காரில் ஏறியதும் வைக்கப்படும் இடைவேளை காட்சி.

 

DCIM (9)

 

படத்தின் மைனஸ்…

  • இரண்டாம் பாதியின் நீளம்.
  • முதல் பாதியில் இருந்து விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் சற்று குறைவே.
  • சைக்கோ எதற்காக கொல்கிறார்? அவரின் நோக்கம் என்ன? போன்ற கேள்விகளுக்கு விடை இல்லாமல் போனது.
  • க்ளைமாக்ஸில் சுவாரஸ்யம் குறைவே.

ஒவ்வொருவராக கொல்லப்படுவதும், காரில் லிப்ட் கேட்பதும், எம்எல்ஏவார் மெக்கானிக் மிரட்ட படுவதும் என பல ட்விஸ்ட்களை வைத்து சவாரியை ஒரு சவாலாக எடுத்திருக்கிறார் குகன் சென்னியப்பன்.

 

DCIM (1)

 

கார் சவாரியில் சைக்கோவையும் ஏற்றி அதன் பின்னர் கதையை நகர்த்தியது இயக்குனரின் புத்திசாலித்தனம்.

மொத்தத்தில் சவாரி… த்ரில்லான பயணம்.!

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்