மாஸ் பாடல் விமர்சனம்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘மாஸ்’ படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளதா என்பதை பற்றிய ஓர் பார்வை இதோ…

1) தெறிக்கும் மாஸ்…
பாடலாசிரியர் : மதன் கார்க்கி
பாடியவர்கள்   : சங்கர் மகாதேவன், ரஞ்ஜித், யுவன்

இனிவரும் காலங்களில் சூர்யாவின் மாஸ் பாடலாக இது அமையும். சூர்யாவின் ரசிகர்களுக்கு இது பிடித்திருந்தாலும் எல்லாரையும் கவருமா? என்பது சந்தேகமே. காரணம் வெஸ்டர்னாக தொடங்கும் இந்த பாடல் டக்கென்று குத்துப்பாடலில் இறங்குவதால் மாஸ்.. லூசாகி போகிறது.

2) நான் அவள் இல்லை…
பாடலாசிரியர் : மதன் கார்க்கி
பாடியவர்கள்   :  கார்த்திக், சின்மயி

இதில்… தான் நேசிக்கும் நாயகனுக்கு இதற்கு முன்பே ஒரு காதல் இருந்தது என்று தெரிந்தும் அவள் விட்டு போன இடத்தில் நான் தொடங்குவேன் என்கிறாள். நாயகனும் இவளை காதலை ஏற்றுக் கொள்கிறார். காதலில் தோற்றவர்கள் மீண்டும் காதலிக்க நிச்சயம் இந்த பாடல் அமையும்.

3) பூச்சாண்டி
பாடலாசிரியர் : கங்கை அமரன்
பாடியவர்கள்   : யுவன், பூஜா

பூச்.. பூச்.. பூச்சாண்டி என குழந்தைகளை கவரும் வகையில் இந்தப் பாடல் தொடங்குகிறது. நிறைய ஆங்கில வார்த்தைகளையும் பயன்படுத்தி வாட்டி, லூட்டி அடித்துள்ளனர். இடையில் பெண் குரலிலும் ஒலிக்கிறது. இதமான மெலோடியாக மாறி மறுபடியும் பூச்சாண்டியாக மாறி தாளம் போட வைக்கும் இந்தப் பாடல்.

4) பிறவி
பாடியவர்கள் : வைக்கம் விஜயலெட்சுமி

கோராஸாக ஒலிக்கின்றது இந்த பாடல். மனிதர்களின் கண்ணீர், காயம், வலி, உணர்வுகள், மரணம் பற்றி சொல்கிறது. வலியை போக்குவதாகவும், விழிப்புணர்வை தூண்டுவதாகவும் அமைந்துள்ளது.

இவை இல்லாமல் மூன்று தீம் மியூசிக் கொடுத்துள்ளார் யுவன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். தங்களது முந்தைய பட பாடல்களை போல் இப்படப் பாடல்களையும் கொடுத்துள்ளனர் யுவன், வெங்கட்பிரபு கூட்டணி. இன்னும் சிறிது ‘மசாலாஸ்’ சேர்த்து ‘மாஸாக’ கொடுத்திருக்கலாம்.

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்