24 திரை விமர்சனம்

நடிகர்கள் : சூர்யா, சமந்தா, நித்யா மேனன், சரண்யா பொன்வண்ணன், கிரிஷ் கர்நாட், அஜய், சார்லி, சுதா, சத்யன் மற்றும் பலர்.
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
ஒளிப்பதிவு : திரு
படத்தொகுப்பு : பிரவீன் பூடி
இயக்கம் : விக்ரம் கே குமார்
பிஆர்ஓ : ஜான்சன்
தயாரிப்பாளர் : 2டி எண்டர்டெயின்மெண்ட் சூர்யா

கதைக்களம்…

1990இல் கதை ஆரம்பிக்கிறது. ஆத்ரேயா மற்றும் சேதுராமன் இருவரும் இரட்டையர். இதில் 3 நிமிடம் மூத்தவர் ஆத்ரேயா.

தன் தம்பி கண்டுபிடிக்கும் Project24 என்ற கால கடிகாரத்தை (டைம் மிஷின் வாட்ச்) கைப்பற்ற முயற்சிக்கிறார். இதனால் அவரது குடும்பத்தை பழிவாங்க,  பச்சிளம் குழந்தையை மட்டும் சேது காப்பாற்றுகிறார்.

இதனிடையில் ஒரு விபத்தில் 26 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் ஆத்ரேயா பின்னர் மீண்டு வந்து வாட்சுக்காக அலைகிறார். தான் தொலைத்த வாழ்க்கையை கொண்டு வர நினைக்கிறார்.

அதன்பின்னர் என்ன ஆனது? வாட்ச் கிடைத்ததா? மகன் சூர்யாவுக்கு தன் பெரியப்பா பற்றி தெரிந்ததா? என பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதில் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

கதாபாத்திரங்கள்…

பொதுவாகவே, சூர்யா கலக்குவார். இதில் 3 வேடம். ஒரு ஆராய்ச்சியாளராக, வாட்ச் மெக்கானிக், வில்லன் ஆத்ரேயா அனைத்திலும் பட்டைய கிளப்பியிருக்கிறார்.

சமந்தா மேல் காதல் கொண்டதும், அதற்காக செய்யும் கிரிக்கெட் ட்ரிக், பைக் பன்சர், வில்லனை சூட் செய்ய, தோட்டாவை ப்ரீஸ் செய்வது என இவரது ராஜ்யம்தான். சபாஷ் சூர்யா.

 

24 still

 

நித்யாமேனன் பாவம். அவருக்கான காட்சியும் அப்படித்தான். சமந்தா பாடல் காட்சிகளில் கவர்ச்சியாகவும், மற்ற நேரங்களில் குடும்ப பெண்ணாகவும் மாறி மாறி ரசிக்க வைக்கிறார்.

கலகலப்பான அம்மாவாக சரண்யா பொன்வண்ணன். தன் குடும்ப ப்ளாஷ்பேக் பற்றி சொல்லும்போது காட்சிகளை காட்டாமல் வார்தையால் கலங்க வைக்கிறார்.

 

Suriya's 24 Movie Review and Rating

 

இவர்களுடன் கிரிஷ் கர்நாட், சத்யன், சார்லி, அப்புகுட்டி ஆகியோரும் உண்டு. இதில் சத்யன் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்.

வில்லன் ஆத்ரேயாவுடன் வரும் மித்ரன் அஜய்யையும் மிரட்டுகிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

காலம் என் காதலி முதல் அனைத்து பாடல்களிலும் ஏஆர் ரஹ்மான் பின்னி எடுத்து இருக்கிறார். பின்னணி இசையில் நான் முன்னணி என்றும் சொல்கிறார்.

படத்தின் மிகப்பெரிய பலம் திருவின் ஒளிப்பதிவு. மலை பெய்யும்போது அதை ஆகாயத்தில் நிறுத்தும் காட்சி கவிதை. ஆராய்ச்சி கூடம் காட்சிகளும் அசத்தல்.

 

Ajay, Suriya in 24 Movie Working Stills

 

ஆர்ட் ரைக்டரின் கைவண்ணத்தில் பழைய கால பொருட்கள் ரசிக்கும் ரகம்.

மதன் கார்க்கி வரிகளில் ‘நான் உன்…’ பாடல் மனதை தொடுகிறது. அதை காட்சி படுத்திய விதம் அருமை. அதில் நாயகியின் காஸ்ட்யூம் டிசைனர் யார்? என்று நிச்சயம் கேட்கத் தோன்றும்.

படத்தின் ப்ளஸ்….

  • ஆத்ரேயாவின் கேரக்டர் மனதில் நிற்கிறது. இனி ஹீரோவும் நானே வில்லனும் நானே என கெத்தாக சூர்யா சொல்லலாம்.
  • பின்னணி இசை மற்றும் பாடல்கள்.

 

24 still 4

 

  • சூர்யா சமந்தா ரொமான்ஸ் மற்றும் டைம் செட் பண்ணி ஏமாற்றுவது சூப்பர்.
  • அருமையான திரைக்கதையில் வைத்திருக்கும் ட்விஸ்ட்கள் சூப்பர்

படத்தின் மைனஸ்…

  • படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப 2 மணிநேரம் 44 நிமிடங்களில் படம் ஓகேதான். அதற்காக சமந்தா குடும்பத்துடன் இணையும் காட்சிகள் மற்றும் அப்போது ரொமான்ஸ் செய்ய அட்ரஸை திருப்பி திருப்பி சொல்வது போர் அடிக்கிறது.

 

24 still 3

 

இது டைம் மிஷின் கதைதானே என்று வரியில் சொல்லிடமுடியாது. அதற்கு உயிர் கொடுத்து, தத்ரூபமாக ஹாலிவுட் பாணியில் தமிழக ரசிகர்களுக்காக கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் விக்ரம் கே குமார்.

வாழ்க்கையில் பின்னோக்கி மற்றும் முன்னோக்கி நாம் காலத்தை கடந்தாலும், நிச்சயம் வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்காது. கடவுள் கொடுத்த வாழ்க்கையை இனிமையாக வாழுவோம் என்பதை அருமையாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

மொத்தத்தில் 24… சூர்யாவின் சூறாவளி ட்ராவல்..!

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்