சூர்யாவின் 24 பாடல்கள் விமர்சனம்..!

ஏ.ஆர். ரஹ்மான் இசைக்கு தமிழக ரசிகர்களையும் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் இசையமைத்து சூர்யா நடித்துள்ள 24 படத்தின் பாடல்கள் சற்று முன் வெளியாகியுள்ளது.

இதற்கு முன் இவர்கள் இணைந்த ‘சில்லுனு ஒரு காதல்’ பட பாடல்களும் சூப்பர் ஹிட்டடித்துள்ளன. தற்போது இவர்கள் கூட்டணியில் வந்துள்ள இப்படத்தின் பாடல்களும் அதனைப் பற்றிய ஒரு பார்வையும்…

1) நான் உன்….

 • பாடியவர்கள் : அர்ஜித் சிங், சின்மயி
 • பாடலாசிரியர் : மதன் கார்க்கி

நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்…
உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன்…
உன் முகம் தாண்டி மனம் சென்ற இடம் பார்த்ததால்…
உன் இதயத்தின் நிறம் பார்த்ததால்…

என்று காதலின் ஆழம் தொடுகிறது இப்பாடல். அருமையான மெலோடி உள்ள இப்பாடல் இனி காதலர்களின் ரிங் டோனாக மாறினாலும் ஆச்சரியமில்லை.

2) மெய் நிகர…

 • பாடியவர்கள் : சித் ஸ்ரீராம், சனாஹ் மொய்யூட்டி, ஜோனிதா காந்தி
 • பாடலாசிரியர் : மதன் கார்க்கி

மெய் நிகரா மெல்லிடையே…  பொய் நிகரா பூங்கொடியே…. என்று இப்பாடல் தொடங்குகிறது. இடை இடையே கோரஸ் குரல்களும் ஒலிக்கிறது.

அரசியே… அடிமையே… அழகியே…. அரக்கியே… என்று தன் காதலியை பல்வேறு விதமாக காதலன் வர்ணிப்பதாக உள்ளது.  இது ஒரு கலக்கலான பாடல் வகையை சேர்ந்தாலும், ரகுமானின் பழைய பாடல்களை ஏதோன நினைவுப்படுத்துகிறது.

3) புன்னகையே….

 • பாடியவர்கள் : ஹரி சரண் சேஷ், சாஷா திருப்பதி
 • பாடலாசிரியர் : வைரமுத்து

புன்னகையே படபடவென ஒலிகளின் துளி என விழுகிறதே…
கனவுகள் கனவுகள் அடி மன கனவுகள் பலிக்கிறதே… என்று பெண் குரலில் இப்பாடல் ஒலிக்க தொடங்கிறது.

இது கடவுள் எழுதும் கவிதை வரிகள் தானோ… என இயற்கையையும் மனதையும் சேர்த்த வரிகளாக இப்பாடல் உள்ளது. தன் அழகான வரிகள் முமூலம் இப்பாடலை மேலும் அழகாயிருக்கிறார் வைரமுத்து.

4) ஆராரோ….

 • பாடியவர்கள் : சக்திஸ்ரீ கோபாலன்,
 • பாடலாசிரியர் : மதன் கார்க்கி

ஹ்ம்…ஹ்ம்…ஹ்ம்…ஹ்ம்…  என்ற மெல்லிய வரிகளோடு இப்பாடல் ஆரம்பமாகிறது. ஹ்ம்…ஹ்ம்… ஆராரோ…. கண்ணே நீ ஆள பிறந்தவர்… ஆராரோ… ஹ்ம்… என தாலாட்டுடன் குழந்தையை போற்றும் விதமாக உள்ளது.

குழந்தைக்கான பாட்டாக இருந்தாலும் ஒவ்வொரு வரியிலும் உற்சாகம் கொடுக்கும் வகையில் உள்ளது.

மண்ணில் தோன்றும் உயிருக்கெல்லாம் ஏதோ ஒரு அர்த்தம் இருக்குமடா…
எந்தன் அர்த்தம் நீதானே… எந்தன் அந்தம் நீதானே... என்ற வரிகள் தாயின் உள்ளன்பையும்  கூறுவதாக உள்ளது.

5) மை ட்வின் ப்ரதர்ஸ்

 • பாடியவர்கள் : ஸ்ரீநிவாசா கிருஷ்ணன், ஹிர்தேய் கட்டானி

6) காலம் என் காதலி….

 • பாடியவர்கள் : பென்னி தயால், சஸ்வத் சிங், அபேய் ஜோத்புர்கர்
 • பாடலாசிரியர் : வைரமுத்து

மாயமில்லை மந்திரமில்லை ஜாலமில்லை தந்திரமில்லை…
காலம் என் காதலியோ… கண் காணா மோகினியோ…
ஐன்ஸ்டீனை மாற்ற வந்த ஆனந்த பேரொலியோ…

சுற்றி வந்தேன் வின்னின் வெளியிலே…
வெற்றி எல்லாம் விரல் நுனியில…
அச்சம் இல்லை எந்தன் வாழ்விலே…
மச்சம் உண்டு எந்தன் நெஞ்சினிலே…

காலத்தின் சாவி கடிகார கூட்டுக்குள்…
காணாத வாழ்க்கை எந்தன் கட்டுப்பாட்டுக்குள்…
தருணத்தை வெல்லும் வித்தை நான் சொல்லட்டா…

ஆண்டவன் செல்லப்பிள்ளை நானோ… நானோ…

என்ற வரிகள் மூலம் காலமும் நம் காதலிதான். காலத்தையும் நேசிப்போம் என்கிறார் பாடலாசிரியர். இப்பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்பதில் ஐயமில்லை.

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்