தங்க மகன் விமர்சனம்

தனுஷ், அனிருத், வேல்ராஜ் ஆகியோரின் வெற்றிக் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு பலத்த எதிர்பார்ப்புள்ளது. மேலும் தனுஷ் உடன் எமியும் சமந்தாவும் டூயட் பாடியுள்ளதால் இந்த தங்க மகன் பலம் கூடியிருக்கிறான். இவர்களின் குடும்ப கதையை கொஞ்சம் பார்ப்போமா?

நடிகர்கள் : தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன், கே எஸ் ரவிக்குமார், ராதிகா, சதீஷ், ஜெயபிரகாஷ், எம் எஸ் பாஸ்கர் மற்றும் பலர்.
இசையமைப்பாளர் : அனிருத்
ஒளிப்பதிவு : எம். குமரன்
படத்தொகுப்பு : எம் வி ராஜேஷ் குமார்
இயக்கம் : வேல்ராஜ்
தயாரிப்பாளர் : தனுஷ், அன்பு செழியன்

கதைக்களம்…

கல்லூரி மாணவர் தனுஷ், எமிஜாக்சனை காதலிக்கிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ள நினைக்கும்போது தனிக்குடித்தனம் போக வேண்டும் என நினைக்கிறார் எமி. இதனால் இவர்களின் காதல் முறிந்து போக பின்னர் சமந்தாவை திருமணம் செய்கிறார்.

இதன் பின்னர் ஒரு நாள் தற்கொலை செய்து கொள்கிறார் தனுஷின் தந்தை கே.எஸ். ரவிக்குமார். தந்தை இல்லாமல் தனுஷ் எப்படி குடும்பத்தை சமாளிக்கிறார்? தந்தை சாவுக்கு காரணம் என்ன? போன்ற கேள்விகளுக்கு பதில் தருகிறது படத்தின் க்ளைமாக்ஸ்..

கதாபாத்திரங்கள்…

தனுஷ்… கல்லூரி மாணவர், குடும்பஸ்தன்.. இரு பாத்திரங்களிலும் ஜொலிக்கிறார். இவரால் மட்டும் எப்படி இதுபோல் காலேஜ் பையனாகவும் நடிக்கி முடிகிறது என்ற கேள்வி எழாமல் இல்லை. படு ஸ்மார்ட்டாக இருக்கிறார். இரண்டு ஹீரோயின்.. ஸோ கொஞ்சம் விளையாடியும் இருக்கிறார். முக்கியமாக கிஸ்… மேலும் பெற்றோரை விட்டுக் கொடுக்காத மகனாக வாழ்ந்திருக்கிறார். சபாஷ்.

இவருடன் சதீஷ்… ஹீரோவுக்கு ஏற்ற ப்ரெண்ட் கேரக்டர். இனி வரும் படங்களில் இந்த கூட்டணி தொடர்ந்தால் ரசிகர்களுக்கு சந்தோஷம்தான். டைமிங் காமெடியில் கலக்கியிருக்கிறார். ஆனால் காட்சிகள்தான் குறைவு.

எமிஜாக்சன், சமந்தா… இதுவரை பார்க்காத கேரக்டரில் இருவரும். சாந்தமான சமந்தா. அழகான மனைவியாக வாழ்ந்திருக்கிறார். எமிக்கு தனுஷை போல் நடிக்க வாய்ப்பு உள்ள கேரக்டர். தண்ணி அடித்துவிட்டு செய்யும் கலாட்டா காட்சி செம. க்யூட்டாக வந்து கிஸ் செய்யும் காட்சிகள்…. செம ஹாட்.

இவர்களுடன் கே.எஸ். ரவிக்குமார், ராதிகா பொருத்தமான தேர்வு. ஜெயப்பிரகாஷ், எம் எஸ் பாஸ்கர், சீதா ஆகியோரின் காட்சிகளை அதிகப்படுத்தியிருக்கலாம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

அனிருத் இசையில் கதைக்கேற்ற பாடல்கள். காட்சிகளுக்கேற்ற பின்னணி இசை. தனுஷ் பன்ச் டயலாக் பேசும் இடங்களில் இசையும் பேச வைக்கிறது.

அடியே.. அடியே.. பாடல் ஒளிப்பதிவின் விருந்து. குமரனுடன் கை குலுக்கலாம். ஒரு நடுத்தர குடும்பத்தின் வீட்டை கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்.

படத்தின் ப்ளஸ்…

  • தனுஷ் உள்ளிட்ட முக்கிய கேரக்டர்கள்
  • பாடல்கள் + பின்னணி இசை
  • அழகான குடும்ப பாசம்

படத்தின் மைனஸ்…

  • வில்லத்தனமே இல்லாத வில்லன்
  • அவசரமாக எடுக்கப்பட்ட காட்சிகள்

இயக்குனர் வேல்ராஜ்… குடும்ப ஆடியன்ஸை குத்தகை எடுத்துவிடுவார் போலிருக்கிறது. பல்ஸ் அறிந்து மாஸ் ஹீரோவை வளைத்து போட்டிருக்கிறார். ஆனால், ஒரு கேரக்டரை நாம் ரசிக்கும் முன்னே அக்காட்சியை முடித்து விடுகிறார். ஏன் சார் இந்த அவசரம்?

மொத்தத்தில் தங்க மகன்… ‘தவமிருந்து பெற்ற மகன்’

 

Thanga Magan Review in English

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்