தற்காப்பு விமர்சனம்

ஷக்திவேல் வாசு நடித்து மிகவும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள படம் இது. சமுத்திரகனியுடன் கூட்டணி அமைத்துள்ள இப்படத்தின் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. எனவே படம் எப்படி என்பதை பார்ப்போமா?

நடிகர்கள் : ஷக்திவேல் வாசு, சமுத்திரக்கனி, வைஷாலி தீபக், அமிதா, சதீஷ் கிருஷ்ணன், ரியாஸ் கான், கணேஷ் பிரசாத், வத்சன் சக்கரவர்த்தி மற்றும் பலர்.
இசையமைப்பாளர் : எஃப் எஸ் பைஷல்
ஒளிப்பதிவு : ஜோன்ஸ் ஆனந்த்
படத்தொகுப்பு : ஷான் லோகேஷ்
இயக்கம் : ஆர் பி ரவி
தயாரிப்பாளர் : எஸ்.செல்வமுத்து, என். மஞ்சுநாத்

கதைக்களம்…

என்கௌண்டர் ஸ்பெஷலிஸ்ட் இன்ஸ்பெக்டர் ஷக்திவேல் ஒரு நேர்மையான அதிகாரி. தன் உயர் அதிகாரி ஒருவர், ரியாஸ் கானை என்கௌண்டர் செய்ய சொன்னது நாட்டுக்காக அல்ல அரசியல்வாதியின் சுயநலத்துக்காக என மனித உரிமை அமைப்பின் விசாரணையில் தெரிந்துக் கொள்கிறார். பின்னர் தான் களங்கமற்றவன் என்பதை நிரூபிக்கவும் தன்னை நிரபராதி என நிரூபிக்கவும் ஷக்தி மேற்கொள்ளும் முயற்சிகளே மீதிக்கதை.

கதாபாத்திரங்கள்…

ஷக்திவேல் வாசுவிற்கு அருமையான கேரக்டர். என்கௌண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஷக்தியாக வாழ்ந்திருக்கிறார். ரொமான்ஸ் வேண்டாம் என முடிவெடுத்த ஷக்திக்கு ஒரு ஹிட்டு. மாறுபட்ட கேரக்டரில் ஜொலித்திருக்கிறார். செம ஸ்மார்ட்.

சமுத்திரக்கனி வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. சமுத்திரக்கனி வந்தவுடன்தான் படம் அதிவேகம் எடுக்கிறது. நாம் சாதாரணமாக என்னும் என்கௌண்டருக்கு பின்னால் மனித உரிமை அமைப்பின் விசாரணையை தெள்ளத் தெளிவாக அழகாக படமாக்கியுள்ளனர்.

இரண்டு காதல் ஜோடிகள்… சதீஷ், வத்ஸன் இவர்களின் காதலிகள் வைஷாலி, அமிதா நல்ல பொருத்தம். ஆனால் ரொமான்ஸ் குறைவே.

இவர்களுடன் ரியாஸ் கான் மற்றும் தொழிலதிபர் கணேஷ் பிரசாத் இருவரும் அருமையான தேர்வு. காட்சிகள்தான் குறைவு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பைசல் இசையில் ‘இவன் பெயர்…’ பாடல் கேட்கும் ரகம். மற்றவை ஓகே ரகம். ஜோன்ஸ் ஆனந்தின் ஒளிப்பதிவில் இரவு நேர காட்சிகள் அந்த லோக்கேஷன் அனைத்தும் அருமை. என்கௌண்டர் மற்றும் க்ளைமாக்ஸ் பைட் அருமை. எடிட்டர் ஷான் லோகேஷ் முதல் பாதியில் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம்.

படத்தின் ப்ளஸ்…

  • ஷக்திவேல் வாசு + சமுத்திரக்கனி
  • க்ளைமாக்ஸ், திரைக்கதை ட்விஸ்ட்
  • மனித உரிமை அமைப்பின் என்கௌண்டர் விசாரணை

படத்தின் மைனஸ்

  • வலுவில்லாத காதல் காட்சிகள்
  • கொஞ்சம் நீளமான முதல் பாதி

படத்தின் ஆரம்ப காட்சியே க்ளைமாக்ஸ் காட்சி என வைத்த இயக்குனருக்கு சபாஷ். ஹீரோவுக்கு டவுள் கேரக்டர்கள் என நினைத்தால் இரண்டையும் ஒன்றாய் சேர்க்கும் காட்சிகள் அருமை.

முற்பாதியை குழப்பிவிட்டு அனைத்து முடிச்சுகளையும் க்ளைமாக்ஸில் அவிழ்ப்பது திரைக்கதை ட்விஸ்ட். கம்பீரமான ஹீரோவுக்கு காதல் காட்சிகள் தேவையில்லை என இயக்குனர் முடிவெடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

இரண்டு காதல் ஜோடிகளின் மரணம் க்ளைமாக்ஸ் காட்சியில் மனதை கரைத்தாலும் அவர்களின் காதல் காட்சிகளில் வலுவில்லாதது கொஞ்சம் வருத்தமே.

காவல்துறையில் அரசியல் கலக்காமல் இருந்தால் அது கரை படாமல் இருக்கும் என்பதை இயக்குனர் ஆணித்தரமாக  கூறியதற்கு சபாஷ். ஷக்தியால் காப்பாற்றபட்ட காவலர்கள் தங்கள் மேல் அதிகாரியை சுட்டு வீழ்த்தியிருந்தால் இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும். இதுவே ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு.

மொத்தத்தில் தற்காப்பு… அரசியல்வாதிகளின் ‘தற்காப்பு’ நாடகம்.

 

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்