தெறி திரை விமர்சனம்

நடிகர்கள் : விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பிரபு, மொட்டை ராஜேந்திரன், இயக்குனர் மகேந்திரன், பேபி நைனிகா, பேபி திவ்யா மற்றும் பலர்.
இசை : ஜி. வி. பிரகாஷ்
ஒளிப்பதிவு : ஜார்ஜ் சி வில்லியம்ஸ்
படத்தொகுப்பு : ஆண்டனி எல் ரூபன்
இயக்கம் : அட்லி
பிஆர்ஓ : டைமண்ட் பாபு
தயாரிப்பாளர் : கலைப்புலி எஸ் தாணு

கதைக்களம்…

ஜோசப் குருவில்லா (விஜய்), தன் மகள் நிவேதாவுடன் (நைநிகா) கேரளாவில் வசிக்கிறார். பேக்கரி நடத்தி வருகிற இவருக்கு ஒரு நாள் லோக்கல் ரவுடியால் பிரச்சினை வருகிறது.

அதனால் போலீஸ் நிலையம் செல்லும் சூழ்நிலை வருகிறது. இதுநாள் வரை சாதுவாக இருந்த ஜோசப்புக்கு வேறு ஒரு முகம் இருப்பது தெரிய வருகிறது.

இதனிடையில், தன்னால் கொல்லப்பட்ட போலீஸ் விஜய், உயிருடன் இருப்பதை அறிந்த வில்லன் மீண்டும் இவரது வாழ்க்கையில் வருகிறார்.

அதன் பின்னர் குழந்தையை காப்பாற்ற ஜோசப் எடுக்கும் முயற்சிகளே தெறியின் மீதிக் கதை.

theri atlee

கதாபாத்திரங்கள்…

விஜய்… மாஸ்+பேமிலி+சென்ட்மெண்ட்… என அனைத்திலும் தெறிக்க விட்டுள்ளார். இதுநாள் வரை விஜய் மீது ஒரு பழி இருந்தது. போலீஸ் உடை அவருக்கு கச்சிதம் இல்லை என கூறப்பட்டது.

ஆனால் இதில் அதை உடைத்தெறிந்துள்ளார். காக்கி சட்டையில் கன கச்சிதம். கூடவே சமந்தாவுடன் ரொமான்ஸ் + லிப் கிஸ் சீன்ஸ்.

ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களுக்கான புத்தாண்டு விருந்துதான். இதில் கேரளா ரசிகர்களை கவர, மலையாளத்திலும் பேசி கைத்தட்டல் பெறுகிறார்.

அதிலும் சமந்தா குடும்பத்திடம் பெண் கேட்கும்போது இப்படி ஒரு மாப்பிள்ளை கிடைக்க மாட்டாரா? என ஏங்க வைக்கிறார்.

ஜோசப் கேரக்டரில் தன் ஒரிஜினல் தாடியுடன் நடித்திருப்பது சிறப்பு. குழந்தை தொழிலாளர்கள் காட்சியில் அனைவரது மனதும் கலங்கும்.

cute nainika

விஜய்யைத் தவிர மற்ற கேரக்டர்கள் இருந்தாலும் இவருக்கு நிகராக மனதை அள்ளுபவர் நைனிகாதான். விஜய்யை அண்ணா என்று எமியுடன் அறிமுகப்படுத்துவது முதல், டேய் தடியா என்று ரவுடிகளை அழைப்பது வரை கொஞ்ச வைக்கிறார்.

ரஜினிக்கு ஒரு குழந்தை நட்சத்திரமாக மீனா கிடைத்த்து போல, விஜய்க்கு மீனாவின் மகள் நைனிகா கிடைத்திருப்பார். விஜய்யை பேபி.. தெறி பேபி கூப்பிடுவது சூப்பர்.

vijay and nainika

எமிக்கு விஜய் மீது காதல் வரும்போது ஒர்க் அவுட் ஆச்சு போல என்று சொல்வது ரசிக்கும் ரகம். க்யூட் நைனிகாவிற்காக மீண்டும் படத்தை பார்க்கலாம். (நைனிகாவுக்கு திருஸ்ட்டி சுத்தி போடுங்க மீனா மேம்..)

சமந்தா… சாந்தமான கொள்ளை அழகு. விஜய்யை ரசிப்பது, காதலி, அம்மா என அனைத்திலும் கவர்கிறார். இறக்கும்போது ஒரு மனைவியா நான் உனக்கு எப்படி? என்று கேட்டு அழவைக்கிறார்.

theri samantha

எமிக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், அழகான டீச்சராக வந்து காதல் பாடம் சொல்கிறார்.

மொட்டை ராஜேந்திரன் காமெடியுடன் காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறார்.

வில்லன் மகேந்திரன், சைலண்ட் வில்லனாக வந்து வைலண்ட் ஆகிறார். இந்த வயதிலும் இவரது வாய்ஸ் இவரை டெரர் வில்லனாக காட்டுகிறது.

சாவுக்கு மேல ஒரு வலியை கொடுக்கனும் என்று வில்லன் கூறும்காட்சிகள் நச். (இவரை ஒரே நிமிடத்தில் விஜய் கட்டி தொங்கவிடுவது எப்படி புரியவில்லை.) இவரது தம்பியாக அழகம்பெருமாள் கொஞ்சம் மிரட்டவும் செய்திருக்கிறார்.

vijay-and-amy-jackson

ராதிகாவுக்கு அளவான காட்சிகள். ஒரு ஜாலியான அம்மாவாக வந்து அருமையான மாமியாராக அசத்துகிறார்.

பிரபு முறுக்கான போலீஸ் அதிகாரியாக வருகிறார். சுனைனா ஒரே காட்சியில் வந்து ப்ரதர்.. எனக்கு ஆள் இருக்கு என்று ராஜா ராணி டயலாக்கை நினைவுப்படுத்துகிறார்.

இவர்களுடன் காளி வெங்கட், சுவாமிநாதன் என நிறைய நட்சத்திரங்கள் தங்களுக்கு கொடுத்த பணியை சிறப்பாகச் செய்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

டைட்டில் கார்டிலேயே ஜிவி பிரகாஷின் இசைத் தாண்டவம் தெரிகிறது. என் ஜீவன் பாடல் அனைவருக்கும் பிடிக்கும். ஆக்ஷன் காட்சிகளில் பின்னணி இசையும் பின்னி எடுக்கிறது.

3 theri stills

ஜார்ஜ் சி வில்லியம்ஸின் ஒளிப்பதிவில் பாடல்கள் கலர்புல். விஜய்யை இப்படத்தில் ரொம்பவே அழகாக காட்டியிருக்கிறார். நைனிகா முதல் அனைவரையும் தன் கேமரா கண்களில் அழகாய் படம் பிடித்திருக்கிறார்.

எடிட்டர் ஆண்டனி எல் ரூபன் முதல் பகுதியை கொடுத்த நேர்த்தியை இரண்டாம் பகுதியில் கொடுத்திருக்கலாம். இண்டர்வெல் வரை காட்சிகள் நகருவதே தெரியவில்லை.

படத்தின் ப்ளஸ்…

  • குட்டி நைனிகாவின் மழலை கலந்த சுட்டித்தனம்
  • போலீஸ் விஜய் செம ஸ்மார்ட் + ஆக்ஷன் மற்றும் சமந்தாவுடன் ரொமான்ஸ்
  • அக்மார்க் போலீஸ் குடும்ப சென்டிமெண்ட் படம்.
  • பாடல் காட்சிகளில் குரு ஷங்கரின் டச்

Theri Exclusive

படத்தின் மைனஸ்….

  • எந்த இடத்திலும் ட்விஸ்ட் இல்லாத வழக்கமான போலீஸ் பழிவாங்கல் கதை
  • வீடு வெடிக்கும்போது விஜய் குழந்தையுடன் தப்பிப்பது எப்படி?
  • குழந்தை தொழிலாளர் மற்றும் அரசியல்வாதிகளின் அடியாட்கள் பற்றிய சொல்ல வந்த காட்சிகளில் வலு சேர்த்திருக்கலாம்.

படத்தின் டைட்டில் கார்டிலேயே ரசிகர்களை கவர்கிறார் அட்லி. ஒவ்வொரு டெக்னிஷியன்களுக்கும் ஐகான் வைத்து டைட்டில் இடுவது நச்.

பாடல் காட்சிகளில் பிரம்மாண்டமான இயக்குனரின் டச். (சுவருக்கு பெயிண்ட் அடித்தல் மற்றும் லொக்கேஷன்ஸ்)

theri vijay stills

அதிலும் ஜித்து ஜில்லாடி பாடலில் வெறுமனே காக்கி சட்டையின் புகழ் பாடாமல், கலர்புல்லாக சொல்லி இருப்பது டைரக்டரின் புத்திசாலித்தனம்.

எந்த இடத்திலும் போராடிக்காமல் படத்தை கொண்டு சென்றதற்காக அட்லிக்கு அப்ளாஸ் கொடுக்கலாம். பழகிய கதை என்பதால் எங்கேயாவது ஒரு ட்விஸ்ட் கொடுக்க முயற்சித்திருக்கலாம்.

மொத்தத்தில் ‘தெறி’ பேபி.. ‘மாஸ்’ பேபி..!

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்