தோழா விமர்சனம்

கார்த்தி-தமன்னா நடிப்பில் வெளிவந்துள்ள மற்றொரு படம் இது. ஆனால் இப்படத்தில் முதன் முறையாக டபுள் ஹீரோ சப்ஜெக்ட்ல் நடித்துள்ளார் கார்த்தி. இப்படம் தனக்கும் நாகார்ஜுனாவுக்கும் ரொம்பவே ஸ்பெஷல் என்று கூறியிருந்தார். அப்படி என்ன ஸ்பெஷல்..? என்பதை பார்ப்போம்…

நடிகர்கள் : நாகார்ஜுனா, கார்த்தி, தமன்னா, விவேக், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா மற்றும் பலர்.
இசையமைப்பாளர் : கோபி சுந்தர்
ஒளிப்பதிவு : பி.எஸ். வினோத்
படத்தொகுப்பு : கே எல் பிரவீன்
இயக்கம் : வம்சி பி
தயாரிப்பாளர் : பிரசாத் வி பொட்லுரி (பிவிபி சினிமாஸ்)

கதைக்களம்…

பிரெஞ்ச் படமான ‘தி இன்டச்சபிள்ஸ்’ படத்தின் தமிழ் ரீமேக் தான் இப்படம். அப்படத்தை பார்க்காதவர்களுக்கு இப்படம் பற்றி ஒரு சின்ன அறிமுகம்.

திருட்டு வழக்கில் கைதாகி பரோலில் வந்த ஜாலி பேர்வழி கார்த்தி. பொதுவாழ்வில் நன்றாக நடந்து கொண்டால் எளிதாக விடுதலை கிடைத்து விடும் என்பதால் விவேக்கின் அறிவுரை பேரில் சேவை செய்ய நினைக்கிறார்.

 

Thozha Movie Stills

 

எங்கும் பிடிபடாமல் போகவே, கை, கால், உடம்பு செயல் இழந்த, கோடீஸ்வரர் நாகார்ஜீனாவுனை கேர் எடுக்க, வேலைக்கு செய்கிறார். அதன்பின்னர் அவர்கள் இருவரின் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சுவாரஸ்யமான உணர்வுப்பூர்வமான சம்பவங்களே இந்த ‘தோழா’.

கதாபாத்திரங்கள்..

கதை இவ்வளவுதானா..? இதில் என்ன இருக்கிறது என்றால் அள்ள அள்ள நிறைய இருக்கிறது எனலாம்.

நாகார்ஜீனா கேரக்டரை ஒத்துக்கொள்ளவே ஒரு பெரிய தில் வேண்டும். ஆக்ஷன் ஹீரோ என்றாலும் அடக்கி ஒடுக்கி ஒரு வீல் சேரில் தன் பயணத்தை நிறுத்தியுள்ளார்.

கோபம், அன்பு, பாசம், கண்டிப்பு, ரொமான்ஸ் என அனைத்தையும் தன் கண்களிலும், உதட்டு அசைவிலும் உணரச் செய்துள்ளார். இன்னும் ஸ்மார்ட்டாகவே தெரிகிறார்.

 

Thozha-Karthi-Tamanna-Movie-Pics-04

 

கார்த்தி… கொம்பன் படத்திற்கு இவருக்கு இது ஒரு புதுமையான களம். காமெடிக்கு நான் கியாரண்டி என அதையும் அவரே செய்துள்ளார். மனிதர் அதையும் ரசிக்கும்படியாக செய்திருக்கிறார்.

அர்த்தமில்லாமல் ஒரு ஆர்ட் வரைந்துவிட்டு, அதை பிரகாஷ்ராஜ் மூலம் கேட்டு தெரிந்துக் கொள்வது நச். தமன்னாவுடன் காதலை சொல்லிவிட்டு, கண்ணாடியில் முட்டி கொள்வது, அம்மாவிடம் பாசத்துக்காக ஏங்குவது என ஒவ்வொன்றிலும் நவரசத்தை காட்டியிருக்கிறார்.

 

thozha still

 

பணம் இருந்தாலும், சந்தோஷத்திற்கு அன்பு வேண்டும் என்பதை சொல்லும் காட்சிகளில் சபாஷ் போட வைக்கிறார்.

தமன்னா அழகு பதுமையாக வந்து செல்கிறார். இவர் காதலை வெளிப்படுத்தும்போது.. உன்ன எனக்கு ஏன் பிடிச்சிருக்கு தெரியல. ஆனா உனக்கு பிடிச்சிட்டா நீ என்னைய நல்லா பார்த்துப்பன்னு தெரியுது சொல்லும் போது காதலுக்கு அழகு சேர்க்கிறார்.

 

stills-from-tamil-film-thozha-396262

 

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், விவேக். இருவரும் சில காட்சிகளில் வந்தாலும் தங்கள் கேரக்டரின் மூலம் முத்திரை பதிக்க தவறவில்லை. கல்பனா சில காட்சிகள் என்றாலும் இன்னும் மனதை விட்டு அகலவில்லை.

அனுஷ்கா, ஸ்ரேயா இருவரும் கெஸ்ட் ரோல் என்றாலும், அதில் அனுஷ்கா பாஸ் மார்க் பெறுகிறார். காதலிச்சதை பெருமையாக நினைக்கும் வாழ்வே சுகம்தான் என்று சொல்லி விடைபெறுவது அசத்தல்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

கோபி சுந்தர் இசையில் குத்து பாடல் அக்மார்க் ஆந்திரா முத்திரை. பின்னணி இசையில் தேர்வு பெறுகிறார். மதன் கார்க்கி வரியில் அமைந்த ‘தோழா’ பாடல் அருமையான மெலோடி.

 

Thozha-Tamil-Movie-Gallery

 

வினோத்தின் ஒளிப்பதிவில் கார்த்திக் வீடு, பாரீஸ் நகரம், நாகார்ஜீனாவின் அரண்மனை என அனைத்தும் கச்கிதம். முக்கியமாக கார் சேஸிங் சீன்.

படத்தின் ப்ளஸ்…

கார்த்தியின் காமெடி கலந்த துடிப்பான நடிப்பு

 

??????????????????????????????????????????

 

முகபாவனைகளை வைத்தே சிக்ஸர் அடிக்கும் நாகார்ஜுனாவின் பெர்பாமென்ஸ். ‘குக்கூ’ ராஜுமுருகனின் உணர்புபூர்வமான வசனங்கள் குடும்பத்துடன் பார்க்கத் தகுந்த படம்.

படத்தின் மைனஸ்…

படத்தின் இரண்டாம் பகுதி நீளம் அழகான ஹீரோயின் இருந்தும் சரியான டூயட் இல்லை.

இயக்கம் வம்சி. தெலுங்கு இயக்குனர் என்றாலும் கார்த்தி அழகான தமிழ்நாட்டு நடிப்பை கேட்டு வாங்கியிருக்கிறார். நாகார்ஜீனா காட்சிகள்தான் சென்டிமெண்ட் என்றால் ஜெயசுதா அவரது பிள்ளைகள் வாழ்க்கையையும் முழு சென்டிமெண்ட் ஆக்கி விடுகிறார்.

 

thozha-movie-new-stills-14

 

வசனங்கள் மூலம் ஒரு அழகான அன்பை பதிவு செய்திருக்கிறார் வம்சி.

மொத்தத்தில் தோழா… மனதுக்கு நெருக்கமானவன்..!

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்