த்ரிஷா இல்லனா நயன்தாரா – விமர்சனம்

‘டார்லிங்’ வெற்றிக்கு பிறகு ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் இளைஞர்கள் மத்தியில் பட்டைய கிளப்பியுள்ள நிலையில் இப்படம் எப்படி வந்திருக்கிறது என்பதை பார்ப்போம்….

நடிகர்கள்  : ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, மனீஷா யாதவ், ஆர்யா, சிம்ரன், ப்ரியா ஆனந்த் மற்றும் பலர்.
இசையமைப்பாளர் : ஜி.வி.பிரகாஷ்
ஒளிப்பதிவு : ரிச்சர்ட் எம் நாதன்.
இயக்கம் : ஆதிக் ரவிச்சந்திரன்
தயாரிப்பாளர் : கேமியோ பிலிம்ஸ்
வெளியீடு : ஸ்டூடியோ க்ரீன்

கதைக்களம்…

த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் டைட்டிலே சொல்லிவிடுகிறது. ஒருத்தி இல்லையென்றால் இன்னொருத்தி என்று… எதற்கும் நீ கவலைப்படவேண்டாம். பெண்கள் நிறைய இருக்கிறார்கள். உனக்கு பிடித்த பெண்ணை தேர்ந்தெடுத்துக் கொள் என்பதே படத்தின் கதை. இதைவிட கதையை சொன்னால் ஸ்வாரஸ்யம் இருக்காது. சரி…. படத்தின் கேரக்டர்கள் எப்படி என்பதை பார்ப்போம்…

கதாபாத்திரங்கள்…

டார்லிங் நாயகன் ஜிவிபிரகாஷ்… படத்தின் டைட்டில் கார்ட்டிலும் இப்படித்தான் வருகிறது. அதுபோலவே படம் முழுவதும் காதல், காமம் என வெளுத்து கட்டியிருக்கிறார். ஆனால் காமத்தில் மட்டும் குஸ்காவோடு முடித்துக் கொள்கிறார். (புரிந்து இருக்குமே…)

படத்தின் பாடல்களில் நன்றாகவே ஆட்டம் போட்டுள்ளார். அதுவும் பிட்டு படம் டி… செம. நன்றாகவே தேறி வருகிறார். இன்னும் முகபாவங்களை கொஞ்சம் மாற்ற முயற்சிக்கலாம். ஒரே ரியாக்ஷன் அடிக்கடி வந்து போகிறது. பள்ளி பருவத்திலும் தாடியுடனே வருகிறார்.

ஆனந்தி… கண்களால் காதல் பேசியிருக்கிறார். இளைஞர்களின் கனவு கன்னியாக மாறிவிடுவார் எனத் தெரிகிறது. சின்ன இடையால் ரசிகர்களை சிக்க வைக்கிறார். இவர்களின் சிறுவயது + பள்ளி பருவ காதல் காட்சிகள் சூப்பர்.

மனீஷா… தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் போல வந்தாலும்… ருசிக்க (ஸாரி) நடிக்கவும் செய்திருக்கிறார். கவர்ச்சியில் கலங்கடிக்கிறார். இவர் சரக்கு அடிப்பதும்… ஆண்கள் சரக்கு அடித்து அது செய்யக்கூடாது என்பதும் அதற்கு தரும் விளக்கமும்… தியேட்டரில் விசில் பறக்கிறது.

இவர்களுடன் விடிவி கணேஷ்…. படம் முழுவதும் போதை ஏற்றும் வசனங்களை பேசி சிரிக்க வைக்கிறார். (எந்த போதை என்று கேட்காதீர்கள்) சிம்ரன் கௌரவ வேடம் என்று பார்த்தால் அவரும் தன் பங்கை அடித்து சீனியர் நடிகைகளுக்கு சவால் விட்டுள்ளார்.

மேலும் ரோபா சங்கர், ஜோதி லட்சுமி, லொள்ளு சபா மனோகர், யூகி சேது ஆகியோரும் படத்திற்கும் வலு சேர்த்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும் ரகமே. அதுவும் பாடல்கள் காட்சிகளில் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்.

பாடல்கள் எப்படி?

‘என்னாச்சு… ஏதாச்சு…; நல்ல மெலோடி… ‘பிட்டு படம் டி….’ பாடலுக்கு ஆடாத இளைஞர்கள் தியேட்டரில் இல்லை. ஆண்ட்ரியா, ரோகேஷ் பாடிய… ‘டகால்டி..’ பாடலும் தாளம் போடும் ரகமே. யுவன் பாடிய…. ‘முத்தம் கொடுத்த மாயக்காரி…’ படத்தில் ஆர்ட் டைரக்டர் உயர்ந்து நிற்கிறார். பின்னணி இசையிலும் நன்றாகவே ஸ்கோர் செய்துள்ளார்.

வசனங்களை பற்றி அவுட்லைன் சொல்லிவிடுகிறோம். ரூம் போட்டுதான் யோசித்தார்களா எனத் தெரியவில்லை. இனிமே வெறும் கைதானா? + மேட்டர் மட்டும்தான் பண்ணல… + முருங்கைகாய் கேசரி + தாத்தா இல்ல அதான்… + பீர் வாங்கும் சிம்ரன் + ஒரே ஒரு தடவைதான் மேட்டர் பண்ணினோம் + ட்ரிங்ஸ் அடிச்சு செக்ஸ் வைச்சிக்கிட்டா…. இப்படி நிறைய வசனங்களை சொல்லாம்.

இன்றைய பெண்களின் மனநிலையையும் ஆண்கள் மனநிலையை புட்டு புட்டு வைத்திருக்கிறார்கள். அதிலும் ஆர்யா வந்து பேசும் டயலாக் … விசில் சத்தம் அடங்க வெகுநேரமாகிறது. இறுதியில் ப்ரியா ஆனந்த் வருகிறார். அவருக்கும் ஒரு காட்சி வைத்து அதற்கு விளக்கம் அளித்திருக்கிறார் இயக்குனர் ஆதிக்.

இளைஞர்களின் பல்ஸ் அறிந்து கூடுதல் பலான அயிட்டங்களை சேர்த்திருக்கிறார் இயக்குனர். ஆனால் ஒட்டுமொத்த இளைஞர்கள் + பெண்கள் இப்படித்தானா? என்பதற்கு படத்தில் பதில் இல்லை. நண்பர்களுடன் படம் பார்க்கலாம்? ஆனால் சகோதர, சகோதரிகளுடன் படம் பார்க்க முடியுமா? டவுட்தான்…

த்ரிஷா இல்லனா நயன்தாரா… ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு டேஸ்ட்

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்