வாலு

மூன்றாண்டுகளுக்கு பிறகு சிம்பு நடித்துள்ள படம் வாலு. இதில் நடித்தபோதுதான் ஹன்சிகாவுடன் நிஜக்காதல் கொண்டார். காதல் முறிந்தாலும் திரையில் இவர்களின் கெமிஸ்ட்ரி எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்…

நடிகர்கள் : சிம்பு, ஹன்சிகா, சந்தானம், விடிவி கணேஷ், நரேன், மந்த்ரா
இசையமைப்பாளர் : தமன்
ஒளிப்பதிவு : ஷக்தி
இயக்கம் :  விஜய்சந்தர்
தயாரிப்பாளர் : நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி

கதைக்களம்…

சிம்பு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். இவரின் பெற்றோர் நரேன், ஸ்ரீரஞ்சனி. இவரின் நண்பர்கள் சந்தானம், விடிவி கணேஷ். ஹன்சிகாவை சந்திக்கும் சிம்பு அவரை காதலிக்கிறார். ஆனால் அவரோ முறைமாமனை திருமணம் செய்யவிருக்கிறேன் என்கிறார். முறைமாமன் ஆதித்யா முரட்டு வில்லன். இதனால் ஹன்சிகாவை தன் காதலில் விழ வைக்கும் சிம்பு என்ன செய்கிறார்? முறைமாமனை எதிர்கொண்டாரா? என்பதே படத்தின் கதை.

கதாபாத்திரங்கள்…

சிம்பு (எ) எஸ்டிஆர்… தன் பழைய பார்முலாவில் வளைத்து வளைத்து ஆடியிருக்கிறார். படம் முழுக்க புது எனர்ஜியோடு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் உள்ள அமைதியாக தோற்றத்தில் அசத்தியுள்ளார். தேவைக்கேற்ப காட்சிகளை தன் வசனங்கள் மூலம் அசால்ட்டாக செய்துள்ளார்.

ஆக்ஷன் காட்சிகளில் பொங்கி எழுவதும், காதல் காட்சிகளில் வெட்கப்படுவதும், செண்டிமென்டில் பீல் செய்வதும், நண்பர்களுடன் கலாட்டா செய்வதும், பைட் காட்சிகளில் பட்டைய கிளப்புவதும் என ஒவ்வொரு ப்ரேமிலும் தன் ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

ஹன்சிகா அழகு பொம்மையாக இல்லாமல் நடிக்கும் காட்சிகளில் சபாஷ் பெறுகிறார். பாடல் காட்சியில் பளிச். ஆனால் அழும் காட்சிகளில் சிம்புவை விட வயதில் மூத்தவராக தெரிகிறார்.

சந்தானம் மொக்க கலாய்ப்புகள் இல்லாமல் படத்திற்கு தேவையானதை பக்காவாக செய்திருக்கிறார். படத்தில் இவரின் பங்கும் நிறைவாகவுள்ளது.

பிரம்மானந்தம், விடிவி கணேஷ், ஸ்ரீரஞ்சனி என ஒவ்வொருவரும் அவர்களின் பணியை நிறைவாக செய்திருக்கிறார்கள். முக்கியமாக ஆடுகளம் நரேன் ஒரு தந்தையின் உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார். அதுவும் அந்த பாத்ரூம் + சரக்கு காட்சி விளக்கம் ‘நச்’. முறைமாமனாக வரும் ஆதித்யா, சைலண்ட் + வைலண்ட் வில்லனாக மிரட்டியிருக்கிறார். ஒரே காட்சியில் வந்தாலும் நம்மை வசியப்படுத்தி செல்கிறார் மந்த்ரா. (ஹ்ம்.. முடியல)

படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் பாடல்கள்தான்… ‘நயன்தாரா சாங்.. ஓ மை டார்லிங்’ பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும். ‘தாறுமாறு…’ பாடலில் எம்.ஜி.ஆர்., ரஜினி, அஜித் கெட்டப்பில் சிம்பு தோன்றும் காட்சிகள் தியேட்டரில் விசில் பறக்கிறது. இருந்தாலும் படத்தில் அடிக்கடி ‘தல’ புராணம் பாடியுள்ளார் சிம்பு. ஆனால் எல்லா பாடல்களின் தாளமும் ஒரே ரகமாக உள்ளது. கவனித்திருக்கலாம்.

பின்னணி இசை ஒரு சில நேரங்களில் இரைச்சலை தந்தாலும் ஆக்ஷன் காட்சிகளில் சிம்புவின் மாஸ் காட்ட உதவியுள்ளது. ஷக்தியின் ஒளிப்பதிவில் சிம்பு வீடு, மார்கெட், ரயில்வே என அனைத்தும் ரசிக்கும் ரகம்.

ஒவ்வொரு வசனங்களையும் நன்றாக யோசித்து பட்டை தீட்டியிருக்கிறார் வசனகர்த்தா. காதல் பற்றியும் பெண்கள் பற்றி சிம்பு பேசும்போது ரசிகர்களின் கைதட்டல்களில் அனல் பறக்கிறது.

படம் வெளியாகும் முன் இயக்குனர் விஜய் சந்தருக்காக இப்படம் வெளியாக வேண்டும் என்றார் சிம்பு. அவர் சொன்னதுபோல் இயக்குனரும் ஒரு சிம்பிளான காதல் கதையை ஆக்ஷன் கலந்து சொல்லியிருக்கிறார். ஆனால் சில தேவையில்லாத காட்சிகள் பொறுமையை சோதிக்கிறது.

மொத்தத்தில் வாலு… ரசிகர்களை வளைத்துக் கொண்டார்.

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்