வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க

பாஸ் என்கிற பாஸ்கரன்’ கூட்டணி உறுப்பினர்கள் ராஜேஷ், ஆர்யா, சந்தானம் மூவரும் இணைந்து இந்த VSOP (‘வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க’)க்கு சீயர்ஸ் சொல்லியிருக்காங்க… எப்படி இருக்குன்னு ஒரு ரவுண்ட் பார்ப்போமா?…

நடிகர்கள் : ஆர்யா, தமன்னா, சந்தானம், பானு, கருணாகரன், வித்யூலேகா, ‘வெண்ணிற ஆடைமூர்த்தி மற்றும் விஷால்
இசையமைப்பாளர் : இமான்
ஒளிப்பதிவு : நீரவ் ஷா
இயக்கம் :  எம். ராஜேஷ்
தயாரிப்பாளர் : ஆர்யாவின் தி ஸோ பீப்பிள்

கதைக்களம்…

வாசுவும் (சந்தானம்) சரவணனும் (ஆர்யா) சிறுவயது முதலே ஒண்ணா படிச்சவங்க. இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள். இதில் சந்தானத்துக்கு பானுவுடன் முதலில் திருமணம் ஆகிவிடுகிறது. ஆனால் பானுவுக்கு ஆர்யாவை பிடிக்கவில்லை என்பதால் நட்புக்கு கட் சொல்கிறார். இதன்பின்னர் ஆர்யா தமன்னாவை காதலிக்க தொடங்க இவரும் நட்பை துண்டிக்க சொல்கிறார். மனைவிக்காக நண்பனை விடுவதா? நட்புக்காக இல்லறத்தை துறப்பதா? என்ற நிலையில் இவர்கள் எடுக்கும் அதிரடி முடிவே படத்தின் கதை…

கதாபாத்திரங்கள்…

இது ஆர்யாவின் 25 வது படம். சினிமாவில் அறிமுகமாகும் போது எந்த எனர்ஜியுடன் இருந்தாரோ அதே எனர்ஜியில் துளியும் குறைவில்லாமல் தூள் கிளப்பியிருக்கிறார். தமன்னாவை துரத்தி துரத்தி காதலிப்பதாகட்டும், நண்பருடன் சேர்ந்து செய்யும் ரகளையாகட்டும் வெட்கமே இல்லாமல் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

இவருடன் சந்தானம்… படத்தில் இவருக்கும் அழகான ஜோடி. திருமணம் ஆகியும் ஆறுமாதமாக முதல்இரவுக்காக ஏங்குபவராக பளிச்சிடுகிறார். ஆர்யாவுடன் மாட்டிக் கொண்டு படும் அவஸ்தைகளும் ஊறுகாய் பேமிலியுடன் திண்டாடும் காட்சிகளும் செம. ஆனால் கலாய்க்கிறேன் என்ற பெயரில் சில நேரம் போரடிக்கும் வசனங்கள்.

நீண்ட நாட்களுக்கு பிறகு தமன்னா… ‘ஜில்’லென்ற வெண்ணிலா ஐஸ்கீரிம் பார்ப்பது போன்ற உணர்வு. இதில் நடிக்கவும் செய்திருக்கிறார். காதலை வெறுப்பதும், பின்னர் சரக்கடித்து விட்டு காதலுக்கு ஓகே சொல்வதும் சூப்பர் ட்விஸ்ட். இவரின் தோழியாக வித்யூலேகா. சும்மா சொல்லக்கூடாது முந்தைய படங்களை விட இதில் நிறையவே ஸ்கோர் செய்துள்ளார். ஆர்யாவை அடிக்கடி முத்தமிடுவதும் குடும்பமாக வந்து கலாய்ப்பதும் என தன் கேரக்டரை நிறைவாக செய்துள்ளார். பானு அழகாக வந்து அம்சமாக நடித்திருக்கிறார். கருணாகரனின் காட்சிகளை அதிகப்படுத்தியிருக்கலாம்.

இவர்களுடன் ஸ்வாமிநாதன், பட்டிமன்றம் ராஜா, மகாநதி சங்கர், சாயாஜி சிண்டே, ரேனுகா, ஷகீலா உள்ளிட்டோரும் தலை காட்டியிருக்கிறார்கள். கௌரவ தோற்றத்தில் விஷால்… சிறிது நேரமே என்றாலும் இவரது காட்சிகள்தான் படத்தின் கரு. நட்பையும் காதலையும் குழப்பிக் கொள்ளக்கூடாது என்பதற்கு இவர் தரும் உதாரணம் நச்.

நீரவ்ஷாவின் ஒளிப்பதிவில் அனைவரும் ஓவர் ப்ரைட். கண்களுக்கு குளிர்ச்சியாக விருந்தளித்திருக்கிறார். தினேஷின் நடனத்தில் ‘நான் ரொம்ப பிஸி பாடல்…’ க்ளாஸ். அதில் கவுண்டமணியின் வாய்ஸ் ரசிகர்களை வெகுவாக கவரும்.

இமானின் இசையில் ‘லக்கா மாட்டிக்கிச்சி…’, ‘சப்ஸ்கைரபர் சாங்…’, ‘எவண்டா ப்ரண்டு…’ பாடல்கள் ரசிகர்களின் ரிங்டோனாக மாறும். நா. முத்துகுமாரின் வரிகளில் பாடல்கள் நன்றாக உள்ளது. விவேக் ஹர்ஷன் இன்னும் நிறைய காட்சிகளை கட் செய்திருக்கலாம். மறந்துவிட்டாரோ என்னவோ?

இயக்குனர் எம்.ராஜேஷ் என்றும் அதே பார்முலாதான். இதில் டைட்டில் கார்டு டிசைன்ஸ் சூப்பர். பாஸ் (எ) பாஸ்கரன், ஓகே ஓகே சாயலே படம் முழுவதும் தெரிகிறது. ஆனாலும் அந்த இரண்டு படங்களில் உள்ள காமெடி லெவல் இதில் மைனஸ்தான். அழகு ராஜாவில் பட்ட அடியை இதில் சற்று குறைத்திருக்கிறார்.

மொத்தத்தில்… வாசுவும் சரவணனும் ஒண்ணா குடிச்சு உளறியிருக்கிறார்கள்.

 

To read VSOP Review in English click here http://www.cinecoffee.com/review/vasuvum-saravananum-onna-padichavanga-movie-review/

 

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்