வெற்றிவேல் திரை விமர்சனம்

நடிகர்கள் : சசிகுமார், மியா ஜார்ஜ், பிரபு, சமுத்திரக்கனி, விஜி சந்திரசேகர், தம்பி ராமையா, ரேனுகா, இளவரசு மற்றும் பலர்.
இசை : இமான்
ஒளிப்பதிவு : எஸ் ஆர் கதிர்
படத்தொகுப்பு : ஏ.எல். ரமேஷ்
இயக்கம் : வசந்த மணி
பிஆர்ஓ : நிகில் முருகன்
தயாரிப்பாளர் : ரவீந்திரன்

கதைக்களம்…

இளவரசு ரேனுகா தம்பதிகளுக்கு இரு மகன்கள். மூத்தவர் வெற்றிவேல் (சசிகுமார்) இளையவர் ஆனந்த் நாக். சசியும் மியா ஜார்ஜ் காதலிக்கிறார்கள்.

சசியின் தம்பி, பிரபுவின் மகளை காதலிக்கிறார். எனவே இளவரசு தன் இரண்டாவது மகனுக்காக பிரபுவிடம் பெண் கேட்க, பிரபுவோ, வேறு ஜாதி என்பதால் பெண் தர மறுக்கிறார்.

இதனிடையில் சசி, தன் 4 நண்பர்களுடன் இணைந்து அந்த பெண்ணை கடத்த சொல்கிறார். அவர்கள் கடத்தும்போது வேறு ஒரு பெண்ணை கடத்தி விடுகின்றனர். தம்பியை காப்பாற்ற அந்தப் பழியை சசிகுமார் சுமக்கிறார்.

அந்தப் பெண் யார்? சசியின் காதல் என்ன ஆனது? போன்ற அத்தனை கேள்விகளுக்கும் விடையே மீதிக்கதை.

கதாபாத்திரங்கள்…

வெற்றிவேல் கேரக்டரில் வெளுத்து வாங்கியிருக்கிறார். இவருக்காக கதைக்களம். புகுந்து விளையாடியிருக்கிறார். இவரது முந்தையப் படங்களில் பெண்களே இவரை சுற்றி சுற்றி காதலிப்பார்கள்.

ஆனால் இதில் இவர் காதலுக்காக ஏங்குகிறார். அதையும் நன்றாகவே கலர்புல்லாய் சொல்லியிருக்கிறார்.

சசியின் தம்பியாக ஆனந்த் நாக். தன் காதலியிடம் பேசும்போது…  வீட்டை விட்டு வரமாட்டீங்க. அம்மா அப்பா வேனும். காதலும் வேனும் சொல்வீங்க. பெண்கள் ரொம்ப Safe இருக்கீங்க. என்று கூறும்போது நம்மை மறந்து கைதட்ட தோன்றுகிறது.

மலையாள பெண்ணாக மியா ஜார்ஜ். கண்களை உருட்டி, காதல் பாஷை பேசியிருக்கிறார். காதலை சொல்லாமல் ஏங்குவதும், காதலன் ஏமாற்றியதும் கலங்கும் காட்சிகள் அருமை. குறைவான காட்சிகள் என்றாலும் மனதில் நிறைகிறார்.

சசியின் மனைவியாக வரும் நிகிலா விமல் நம்மை நன்றாகவே கவர்கிறார். அமைதியாக வந்து அருமையான நடிப்பை தந்து கதையின் நாயகியாக மாறியிருக்கிறார்.

பிரபுவின் மகள் வர்ஷா, ஏதாச்சும் பன்னு சரவணா என்று சொல்லி சொல்லியே சில பெண்களின் மனநிலையை புரிய வைக்கிறார்.

இவர்களுடன் நம் மனதை அள்ளும் கேரக்டரில் பிரபு, இளவரசு, ரேனுகா, தம்பி ராமையா ஆகியோர் சிறப்பாக செய்துள்ளனர்.

வில்லியாக விஜி சந்திரசேகர் மிரட்டியிருக்கிறார். வாழ்த்துக்கள்.

கௌரவ தோற்றத்தில் சமுத்திரக்கனி, விஜய் வசந்த் ஆகியோர் வந்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைர்கள்…

எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவில் கிராமத்து காட்சிகள் அருமை. இமானின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும் ரகம்.

முத்துவின் கலை வண்ணத்தில் கிராமத்தின் வீடுகளும், அவற்றின் அமைப்புகளும் பக்கபலம். ஆக்ஷன் காட்சிகளுக்கு கை கொடுத்திருக்கிறார் திலீப் சுப்புராயன்.

படத்தின் ப்ளஸ்…

  • ட்விஸ்ட் நிறைந்த க்ளைமாக்ஸ் காட்சிகள்
  • பாடல்கள் மற்றும் பின்னணி இசை
  • அருமையான கிராமத்து சூழல் நிறைந்த சொந்தங்கள்
  • நேர்த்தியான கதை மற்றும் கதாபாத்திரங்கள்
  • வசந்தமணியின் வசனங்கள்

படத்தின் மைனஸ்…

  • பழகிப்போன கிராமத்து கதைதான்
  • பெண் மாறும்போதே நம்மால் சில காட்சிகளை யூகிக்க முடிகிறது.

அழகான குடும்பஃகளையும் கிராமத்து மக்களையும் நம்பி எடுத்திருக்கிறார் வசந்த மணி. அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். சில காட்சிகள் பழகியது போல் இருந்தாலும், இரண்டாம் பாதியில் ட்விஸ்ட்டுகளை  கொடுத்து படத்தை கரை சேர்த்திருக்கிறார்.

மொத்தத்தில் வெற்றிவேல்… வெளுத்து கட்டியிருக்கிறார்.

 

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்