தெறி பாடல்கள் விமர்சனம்

விஜய் நடிக்க, தாணு மிகப்பிரம்மாண்டமான முறையில் தயாரித்து அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தெறி. இது ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இல்லாத அளவிற்கு படத்திற்கும் படத்தின் பாடல்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பு உருவாக்கியுள்ளது. எனவே, இரண்டும் பெரும் வரவேற்பை பெறும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் பாடல்கள் பற்றிய ஒரு சிறிய பார்வை இதோ…

ஜித்து ஜில்லாடி…

 • இப்பாடலை ரோகேஷ் எழுதியிருக்கிறார்.
 • தேவா மற்றும் பாலசந்திரன் இருவரும் பாடியுள்ளனர்.

ஜித்து ஜில்லாடி.. விட்டா கில்லாடி… மாமா டாலடிக்கும் கலரு கண்ணாடி… எனத் தொடங்கும் இப்பாடல் ஒரு கானா பாட்டு…

போலீஸ்காரன் ஜிப்சி.. தேவையில்ல எப்ஃசி…. என எதுகை மோனையோடு குழந்தைகளை கவரும் வகையில் உள்ளது. மேலும் சிங்கத்தை பாரேன்.. தோளில் ஸ்டாரை வாங்கும் போலீஸ்காரன் என போலீஸ்காரனுக்கு கம்பீரம் சேர்ப்பதாக உள்ளது.

படு ஸ்பீடாக தொடங்கும் இப்பாடல் பின்பு குத்து பாட்டு டிரெண்டுக்கு மாறி வருகிறது. விஜய் மற்றும் இசையமைப்பாளர் தேவா இணைந்தாலே அப்பாடல் ஹிட்டுதான். எனவே இதுவும் சூப்பர் ஹிட்டுதான்.

என் ஜீவன்…

 • இப்பாடலை நா முத்துக்குமார் எழுதியிருக்கிறார். இதில் வரும் சமஸ்கிருத வார்த்தைகளை ஆர் தியாகராஜன் எழுதியுள்ளார்.
 • ஹரிஹரன், சைந்தவி மற்றும் வைக்கம் விஜயலட்சுமி ஆகியோர் பாடியுள்ளனர்.

உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே… என சைந்தவியின் குரலில் தொடங்குகிறது. மனதை உருக்கும் அருமையான மெலோடி இது. இடையில் வைக்கம் விஜயலட்சுமியின் குரலும் ஒலிக்கிறது.

நா. முத்துகுமாரின் வரிகள் இப்பாடலுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. அதில் உள்ள…

விடிந்தாலும் வானம் இருள் பூசவேண்டும்…

உன் மடி மீது சாய்ந்து கதை பேசவேண்டும்..

முடியாத பார்வை நீ வீச வேண்டும்…

முழுநேரம் என் மேல் உன் வாசம் வேண்டும்..

என்ற வரிகள் காதலர்களை கவரும் வகையில் உள்ளது.

ஈனா… மீனா… டீக்கா…

 • இப்பாடலை பா விஜய் மற்றும் அருண் ராஜா காமராஜ் எழுதியுள்ளனர்.
 • உத்ரா உன்னிகிருஷ்ணன் மற்றும் ஜி.வி. பிரகாஷ் இருவரும் பாடியுள்ளனர்.

இது குழந்தைகளுக்கான பாடல். தேசிய விருது பெற்ற உத்ரா உன்னி கிருஷ்ணன் குரல் இதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

தூங்கு மூஞ்சி.. லேசி கூசு, லாஸ்ட் பென்ச்.. மரமண்ட

டிபன் பாக்ஸ்சு,  சமையல் கட்டு, ஐயர்ன் பன்னு, யூனிபார்ம்

என தந்தை-மகள் வார்தைகளாலே விளையாடி இப்பாடலை துவக்குகின்றனர்.

ஈனா.. மீனா டீக்கா… ஈ காட்டுமோ ஷோக்கா…

குட்டி போனி டெய்லு குயிட்டா… கையில் மாட்டிக்கிட்டா..

நிலவோடு மார்னிங் வாக்கா.. கிய்யா முய்யா டாக்கா..

ச்சும்மா இங்கி பிங்கி போங்கி.. போட்டு ஓடிப்போட்டா..

இவர்களின் வாழ்வில் நடக்கும் ஒவ்வொன்றையும் அழகாய் குட்டீஸ்க்கு பிடித்த ரைம்ஸ் பாணியில் பாடியுள்ளனர்.

செல்லாக்குட்டி…

 • இப்பாடலை கபிலன் எழுதியிருக்கிறார்.
 • விஜய் மற்றும் நீதி மோகன் இருவரும் பாடியுள்ளனர்.

இப்பாடலும் விஜய்க்கும் சமந்தாவுக்கும் உள்ள டூயட் பாடல்.

ஒண்ணே ஒன்னு… கண்ணே கன்னு செல்லாக்குட்டியே…

என் காதல் துட்டை சேர்த்து வச்ச கல்லாப் பெட்டியே…

என்று விஜய்யின் குரலில் இப்பாடல் ஒலிக்கும் போதே அதை ரசிக்க தோன்றுகிறது.

தொட்டு பாக்க கிட்ட வந்த மிட்டா மிராசே…

உன் விரலு பட்டா வெடிக்கும் இந்த வெள்ளை பட்டாசு..

செல்ஃபி புள்ள போல இந்த செல்லாக்குட்டியே பாடலும் பெரும் ஹிட்டடிக்கும்.

தாய்மை…

 • இப்பாடலை புலவர் புலமைப்பித்தன் எழுதியிருக்கிறார்.
 • பாம்பே ஜெயஸ்ரீ பாடியுள்ளார்.

தாய்மை வாழ்கென தூய செந்தமிழ்…  ஆரிராரோ ஆராரோ…

தங்க கை வளை… வைர கை வளை… ஆரிராரோ ஆராரோ…

கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாக கொண்ட பாடல் இது. ஆனால் இந்த பாடல் ஒரு சிறிய பாடலே. இரண்டு நிமிங்கள் 48 நொடிகள் வரையே இப்பாடல் உள்ளது.

ராங்கு…

 • இப்பாடலை கபிலன் எழுதியிருக்கிறார்.
 • டி ராஜந்தர், ஜி.வி. பிரகாஷ் மற்றும் சோனு கக்கார் ஆகியோர் பாடியுள்ளனர்.

விஜய்க்கும் எமிக்கும் உள்ள பாடல் இது.

உன்னால நான் கெட்ட.. என்னால நீ கெட்ட..

வாயோடு வாயாட வாடி கிட்ட

உன்னதான் நான் தொட்டேன்.. என்னதான் நீ தொட்ட

உன்ன விட்ட ஒரு போதும் வாழ மாட்டேன் என இப்பாடல் தொடங்குகிறது.

காதலை ஒரு கலாட்டவாக இப்பாடல் சொன்னாலும் குத்து பாட்டுக்கு இணையாக இப்பாடல் அமைந்துள்ளது.

டப் தெறி ஸ்டெப்…

 • இப்பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதி பாடியுள்ளார்.

மொத்தத்தில் அனைத்தும் கலந்த கலவையாக உள்ள இப்பாடல்கள் நிச்சயமாக தெறிக்கும்.

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்