ஜீரோ விமர்சனம்

இந்த ஜீரோ… ரொமான்டிக் த்ரில்லர் என்ற சப் டைட்லோடு என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்..

நடிகர்கள் : அஸ்வின், ஷிவதா, ஜேடி சக்கரவர்த்தி, ரவி ராகவேந்திரர், துளசி மற்றும் பலர்.
இசையமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா
ஒளிப்பதிவு : பாபு குமார்
படத்தொகுப்பு : சுதர்சன்
இயக்கம் : ஷிவ் மோகா (அருண்குமார்)
தயாரிப்பாளர் : பாலாஜி கபா

கதைக்களம்…

அஸ்வின், ஷிவதா இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர்கள். நாயகிக்கு மட்டும் அடிக்கடி ஏதோ ஒரு சத்தம் காதில் கேட்கும்.

எவர் கண்களுக்கும் தெரியாத சில ஆன்மாக்களின் உலகமும் இவர் கண்களுக்கு தெரியும். இதுபோன்ற ஒரு புரியாத கனவுலகம் இவரின் இறந்து போன அம்மாவிற்கும் இருந்திருக்கிறது.

இந்த புதுவித அனுபவம் ஒரு நாள் முற்றி அந்த உலகத்திற்கே போகிறார் ஷிவதா. ஆனால் இது தெரியாத அஸ்வின் அவரை தேடி அலைகிறார்? அதன்பின்னர் அவர் எப்படி கண்டுபிடித்தார்? அது என்ன மாய உலகம்? அதற்கும் நம் உலகத்திற்கும் என்ன தொடர்பு என்பதே இந்த ஜீரோ.

கதாபாத்திரங்கள்..

அஸ்வின்.. ஒரு யதார்த்த கணவனாக காதலனாக வாழ்ந்திருக்கிறார். இவரின் மனைவிக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்று தன் உறவினர்கள் சொன்னாலும் காதலுக்காக ஏங்கும் காட்சிகளில் தன் பரிதவிப்பை அழகாக காட்டியிருக்கிறார்.

ஒரே காட்சியில் ஆறு அஸ்வின்கள் தோன்றும் காட்சியில் நம்மையே குழப்பி காட்சிகள் அமைத்த இயக்குனருக்கு ஒரு சபாஷ் போடலாம்.

நாயகன் அஸ்வின் என்றாலும் படம் முழுக்க ஆட்சி செய்திருக்கிறார் ஷிவதா. முற்றிலும் ஒரு அருமையான நடிப்பை வழங்கி ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்.

????????????????????????????????????????????????????????

தன் இறந்த அம்மா தன்னை அழைக்கும்போது செல்வதும் பின்னர் திரும்பும் காட்சிகளில் தன் அழகான கருவிழிகளையும் நடிக்க செய்திருக்கிறார். இனி இவரை அதிக படங்களில் காண ரசிகர்களுக்கு வாய்ப்பிருக்கிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஜே.டி.சக்கரவர்த்தி.  எப்போதும் போல அமைதியான அலட்டிக் கொள்ளாத நடிப்பு.

ஹீரோயின் தாயாக வருபவர் நல்ல தேர்வு. கதை சொல்லி மகளை அழைத்து செல்லும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. இவர்களுடன் ஹீரோவின் அப்பா ரவி ராகவேந்தர், பக்கத்து வீட்டு அம்மா துளசி, டாக்டர் ஷர்மிளி ஆகியோர் சில காட்சிகளும் என்றாலும் மனதில் நிற்கிறார்கள். அந்த சூப்பர் மார்கெட் செக்யூரிட்டி உட்பட.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்தின் மிகப்பெரிய பலம் இசை மற்றும் ஒளிப்பதிவுதான். “எங்கே போனாய் என்னை விட்டு” என்ற பாடல் மனதில் நிற்கும். நிவாஸ் கே பிரசன்னா பின்னணியில் இசையில் மிரட்டியிருக்கிறார். இந்த இசையால் மட்டுமே நம்மால் இந்த வித்தியாசமான படத்துடன் பயணிக்க முடிகிறது.

??????????????????????????????????????????????????

பாபுவின் ஒளிப்பதிவில் அந்த கனவுலகம் படு அமர்க்களம். அதுவும் அந்த வெள்ளை பாம்பு கிராபிக்ஸ் நிஜமான பாம்பு போல் ரசிக்க வைக்கிறது.

எடிட்டர் சுதர்ஷன்தான் நம் பொறுமையை மிகவும் சோதித்து விட்டார். அவர் மட்டும் கத்திரியை வைத்திருந்தால் படம் இன்னும் ரசிக்க வைத்திருக்கும்.

படத்தின் ப்ளஸ்….

  • வித்தியாசமான மேக்கிங் + கிராபிக்ஸ்
  • ஷிவதா நாயரின் மாறுபட்ட நடிப்பு

படத்தின் மைனஸ்…

  • எந்தவொரு அதிசயம் நடந்தாலும், செல்ஃபி, வீடியோ எடுக்கும் நம் ஜனங்கள் ஆகாயத்தில் அதிசயம் நடக்கும் அந்த காட்சியில் ஒருவருமே செல்போனை எடுக்காதது ஏன்…? இயக்குனர் மறந்துவிட்டாரோ..?
  • படத்தின் மிகப்பெரிய நீளம்

Zero Movie stills

ஆதாம் ஏவாள் காட்சிகளில், மற்றொரு ஒருத்தியை காட்டி நம் முன்னோர் கதை சொல்லி புதிய பாடம் எடுத்து இருக்கிறார் டைரக்டர்.

சிக்கலான கதையை பல கோணங்களில் அலையவிட்டு இறுதியில் பைபிள் கதையை சற்று மாறுதலாக சொல்லி அப்ளாஸ் அள்ளுகிறார் இயக்குனர்.

எந்த ஒரு வன்முறையும் இல்லாமல் பேய் பிசாசு இல்லாமல் ஒரு த்ரில் அனுபவத்தை கொடுத்துள்ளார் அறிமுக இயக்குனர் ஷிவ் மோஹா.

மொத்தத்தில் ஜீரோ… கோலிவுட்டின் வித்தியாசமான ஹீரோ..!

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்