இந்தியளவில் தேசிய விருதை போல் உலகளவில் மிகவும் உயர்ந்த விருதாக கருதப்படுவது ஆஸ்கார் விருது. அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற இதற்கான விழாவில் திரைத்துறையைச் சேர்ந்த பல பிரிவினருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டின் ஆஸ்கார் விருது பெற்றவர்களின் விவரங்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
சிறந்த திரைப்படம்: ஸ்பாட்லைட்
சிறந்த ஆவணப்படம்: ஏமி
சிறந்த குறும்படம்: ஷெட்டர்
சிறந்த அனிமேஷன் குறும்படம்: ஃபியர் ஸ்டோரி
சிறந்த அனிமேஷன் திரைப்படம்: இன்சைட் அவுட்
சிறந்த ஆவணக் குறும்படம்: ஏ கேர்ள் இன் தி ரிவர் : தி ப்ரைஸ் ஆஃப் ஃபர்கிவ்னஸ்
சிறந்த பிறமொழித் திரைப்படம்: சன் ஆஃப் சௌள் (ஹங்கேரி மொழி)
சிறந்த நடிகர்: லியோனார்டோ டி காப்ரியோ (தி ரெவனண்ட்)
சிறந்த துணை நடிகர்: மார்க் ரைலான்ஸ் (ப்ரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ்)
சிறந்த நடிகை: ப்ரீ லார்சன் (ரூம்)
சிறந்த துணை நடிகை: அலிசியா விக்காண்டர் (தி டானிஷ் கெர்ள்)
சிறந்த இயக்குனர்: அலஹன்ரோ கொன்சாலஸ் இன்யாரிட்டோ (தி ரெவனண்ட்)
சிறந்த ஒளிப்பதிவு: எம்மானுவல் லுபெஸ்கி (தி ரெவனண்ட்)
சிறந்த படத்தொகுப்பு: மார்கரெட் சிக்ஸல் (மேட் மேக்ஸ் ஃப்யூரி ரோட்)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: கோலின் கிப்ஸன் (மேட் மேக்ஸ் ஃப்யூரி ரோட்)
சிறந்த இசையமைப்பாளர்: என்னியோ மோரிகோனி (ஹேட்ஃபுல் எயிட்)
சிறந்த பாடல்: ஜிம்மி நேம்ஸ் மற்றும் சாம் ஸ்மித் (ரைட்டிங்ஸ் ஆன் தி வால் – ஸ்பெக்டர்)
சிறந்த திரைக்கதை: டாம் மெக்கார்த்தி மற்றும் ஜோஷ் சிங்கர் (ஸ்பாட்லைட்)
சிறந்த தழுவல் திரைக்கதை: ஆடம் மெக்கே மற்றும் சார்லஸ் ரன்டால்ஃப் (தி பிக் ஷார்ட்)
சிறந்த ஆடை வடிவமைப்பு: ஜென்னி பெவேன் (மேட் மேக்ஸ் ஃப்யூரி ரோட்)
சிறந்த சிகை மற்றும் முடி அலங்காரம்: லெஸ்லி வேண்டர்வால்ட், எல்கா வார்டெகா, டாமியன் மார்டின் (மேட் மேக்ஸ் ஃப்யூரி ரோட்)
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: ஆண்ட்ரூ வொயிட்ஹர்ஸ்ட், மார்க் வில்லியம்ஸ் ஆர்டிங்டன், சாரா பென்னட் மற்றும் பால் நோர்ரிஸ் (எக்ஸ் மஷீனா)